அதிபர், ஆசிரியர்கள், பழையமாணவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும்,
விக்ரோறியா கல்லூரி,
சுழிபுரம். ஆங்கில நூல்நிலையம்
எமது தாயார் திருமதி கனகாம்பிகை விஸ்வலிங்கம் அவர்களினதும், இன்னொரு ஆங்கில ஆசிரியையான திருமதி புனிதம் செல்வதுரை அவர்களினதும் நினைவாக, விக்ரோறியா கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் இணைந்து கல்லூரியின் ஆங்கில நூல்நிலையம் அமைத்துக்கொடுத்தமையானது என்னையும் எனது சகோதரர்களையும் மிகவும் பெருமைப்படுத்தி, மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனது தாயாரை நினைவுகூர்ந்து, ஆங்கில நூல்நிலையம் அமைப்பதற்கான எண்ணத்தை செயலாக்கி, இந்த கட்டிடத்திற்கு நன்கொடை வழங்கிய பழைய மாணவர்களுக்கும் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும், முக்கியமாக விக்ரோறியா கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
வெளிநாட்டில் வசிக்கும்போதுதான் ஆங்கிலத்தின் அருமை பலருக்கும் புரியும். இந்த சர்வதேச மொழியை இனிவரும் சமூகத்தினர் தமது எதிர்கால நலனை முன்னிட்டு நன்கு படித்து பயன்பெற எமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நூல்நிலையம் உதவியாகவிருக்கும். எனது தாயாரிடம் ஆங்கிலம் கற்ற பலரும் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து, இந்த மிகப்பெரும் கல்விக்கொடையை அவரின் பெயராலே கல்லூரிக்கு வழங்கியிருக்கிறார்கள். திருமதி கனகாம்பிகை விஸ்வலிங்கத்தின் பிள்ளைகளாகிய கிரிதரன், கிரிஜா, வனஜா, முரளிதரன் ஆகிய நாம், எமது அம்மாவின் ஆளுமையையும் விக்ரோறியாக்கல்லூரியில் அவருக்கு இன்றும் இருக்கும் செல்வாக்கையும், அவரிடம் படித்த மாணவர்களின் மதிப்புணர்வையும் கண்கூடாக பார்த்து மிகவும் பெருமிதம் அடைகிறோம்.
எமக்கு இந்த பெருமையை வழங்கிய பழைய மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பாடத்தில் அதிசிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கு அம்மாவின் பெயரில் பண உதவித்தொகை வழங்குவதற்காக ஏற்கனவே ரூபா 200 ஆயிரம் ரூபாவிற்கு நிலையான வைப்பக் கணக்கு ஒன்றை நான் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஆங்கில நூல்நிலையம் சகல பாடங்களையும் உள்ளடக்கிய புத்தகங்களுடன் விரிவாக்கப்படுவதற்கு என்னாலான சகல உதவிகளையும் நான் செய்வேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
நன்றி
வனஜா விஸ்வலிங்கம்
(கிரிதரன், கிரிஜா மற்றும் முரளிதரன் சார்பாகவும்)
To: The principal of Victoria College, teachers, students and old students association,
English Library
We, the children of Late Mrs. K Viswalingam are extremely proud and very happy that the English library in Victoria College has been opened in the memory of our mother and her colleague, late Mrs. P Selvadurai. It is a great gesture by the old students who initiated this effort which would help the students enormously in developing their language skills. We are overwhelmed by the respect the school still have for our mother.
The Victoria College old students’ diaspora have comprehensibly realized the importance of English language and want the next generation to get more benefits from the school where they were once students. As an old student of Victoria College, I also arranged to offer a cash gift to students who get ‘A’ in the English language in their GCE O/L, on behalf of our mother, late Mrs. K Viswalingam. A fixed deposit of Rs.200,000 was opened a few years ago, just for this purpose. Also, I have planned to donate more books to the English library in future so that English books in all the subjects will be available for the students who are following English medium classes.
We are very grateful to the Victoria College old students association, especially to Mr. Senthilnathan, from Melbourne JVC OSA, Australia Mr.S.Ravishankar,UK who apparently motivated the other diaspora, old students, that the library should be named after my mother as well. Thank you all from the bottom of our hearts for honoring our mother in such a great way.
On behalf of my siblings; V Giritharan, Mrs. Girija Thavendrakumar and V Muralitharan and myself
Thank you.
Vanaja Viswalingam
(On the behalf of Giritharan'Girija & Muralitharan)