Tuesday, 3 January 2017

1960 களின் வி.துறை ஆசிரியர் திரு.சம்பந்தர் வருகை

எமது கல்லூரியில் 1960 ம் ஆண்டுக் காலப் பகுதிகளில் விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியராக கடமையாற்றிய திரு.சம்பந்தர் அவர்கள் கல்லூரியை பார்வையிடுவதற்கக 90 ஐ தாண்டிய தள்ளாத வயதிலும் அவரது குடும்பத்தினருடன்  3 நவ  ஆகிய இன்று வருகை தந்திருந்தார்.

இவர்களது வருகைக்கான ஒழுங்குகளை பழைய மாணவர் சங்கப் பொருளாளர் விக்டோரியன் திரு.வி .உமாபதி அவர்கள் செய்திருந்தார். இதன்போது அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார் அவர்களுடன் பிரதி அதிபர் திரு   மதிதரன் .விளையாட்டுத்  துறை பொறுப்பாசிரியர் திரு சிவச்செல்வன் ,விளையாட்டுத் துறைப் பயிற்றுனர் திரு சிவரூபன் ஆகியோரும், பழையமாணவர் சங்கப் பிரதி நிதிகளும் சம்பந்தர் ஆசிரியரிடம் கற்ற மாணவர்களுமான திருமதி.நாச்சியார் செல்வநாயகம் ,திரு சிவரஞ்சன்  ஆகியோரும்  கலந்து கொண்டிருந்தனர்.

  இங்கே சொடுக்குக  > ஒளிப் படங்கள் .....

பழைய மாணவன் திரு.கந்தசாமி அருணகிரிநாதன் வருகை

Nஎமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.கந்தசாமி அருணகிரிநாதன் குடும்பத்தினர் பாடசாலையை பார்வையிடுவதற்காக அவுத்திரேலியா மெல்பேர்ன் நகரிலிருந்து 28/12/2016 அன்று வருகை தந்திருந்தனர். 

இதன்போது அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் முன்னாள் அதிபர்.பிரம்மஸ்ரீ.வ.ஸ்ரீகாந்தன் அவர்களுடன் முன்னாள் பிரதி அதிபர் திரு.செ சிவகுமாரன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திக் குழுப் பொருளாளர் ஆசிரியர்.ந.ரமணன் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர். 


5/12/2012 இல் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தினரால்  புனரமைப்புச் செய்யப் பெற்ற "ரிஜ்வே" மண்டபத்தில்........




15/02/2016 இல்  திறந்து வைக்கப் பெற்ற தொழில் நுட்ப ஆய்வு கூடத்தின் முன்பாக...... 



























9/11/2015 இல் திறத்து வைக்கப் பெற்ற சுப்பையாஉடையார் தெய்வானைப் பிள்ளை அரங்கின் முன்பாக......