Tuesday, 1 November 2016
விக்ரோரியாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான ஊக்குவிப்பு நிதி
உயர்தரம் பயிலும் பொருளாதரத்தில் நலிவுற்ற மாணவர்களிற்கான கற்றலிற்கு உதவும் நோக்கோடு ஜேர்மன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான திரு.அ.ரங்கநாதன், திரு.ச.பாலகிருஷ்ணன் ( Bala Master) ,கலாநிதி நா.பாலமுருகன்,திரு..சி.தவராஜா,திரு.மா.சோமசுந்தரம்,திருமதி.சோ.கோடீஸ்வரி ஆகியோரால் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி அவர்கள் அண்மையில் ஜேர்மன் சென்றிருந்த போது வழங்கப்பெற்ற நிதியில் இருந்து 2016 நவம்பர் தொடக்கம் 2017ஜூலை வரையிலுமான திட்டத்தின் ஆரம்ப கட்ட கொடுப்பனவாக தலா ரூபா 2000 , 1 நவம்பர் ஆகிய இன்று சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின்போது பயன் பெறும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.நிகழ்வின்போது உயர்தர வகுப்பாசிரியர்களான திருவாளர்கள் நா.ரமணன் ,த..சத்தியசீலன், செ.றோகேசியன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
Saturday, 8 October 2016
துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு - ஐக்கிய இராச்சிய பழைய மாணவர்கள் சார்பில்
ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்களும் எமது கல்லூரி வளர்ச்சியிலும் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திலும் கரிசனை கொண்டவர்களுமான திரு.தா.கமலநாதன் ,திரு.பா.ஆனந்தகுமார் ஆகியோர் ,அண்மையில் ஐக்கிய இராச்சியம் சென்ற பழைய மாணவர் சங்கத் பொருளாளர் திரு.வி.உமாபதி அவர்களூடாக கொடுத்தனுப்பிய ( திரு.தா.கமலநாதன்- 51468 ரூபா + திரு.பா.ஆனந்தகுமார்- 47825 ரூபா ) நிதியில் கொள்வனவு செய்யப் பெற்ற துடுப்பாட்ட உபகரணங்களின் கையளிப்பு நிகழ்வு 7 / 10 / 2016 அன்று வெள்ளிப் பிரார்த்தனை நிறைவு பெற்ற பின்னர் கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் அதிபர் ,,பழையமாணவர் சங்கத் தலைவர் திரு.அ.கிருபானந்தமனுநீதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வின் போது விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.சிவச்செல்வன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இச் செயல்திட்டத்திற்கு Dr.செ.கண்ணதாசன் ,திரு.ந.சிவரூபன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர் .
Wednesday, 5 October 2016
Monday, 3 October 2016
Monday, 19 September 2016
மெய்கண்டான் மகா வித்தியாலய நடனத் துறை மேம்பாட்டிற்கென ஆஸ்திரேலிய மெல்பெர்ன் நகர நடனாலயா நடனக் கல்லூரி இயக்குனர் திருமதி மீனா இளங்குமாரன் அவர்களால் வழங்கப்பெற்ற ரூபா 45000 அவர்கள் சார்பில் முன்னாள் அதிபர் வ.ஸ்ரீகாந்தன் அவர்களால் வித்தியாலய அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது .
மேலதிக படங்களிற்கு..................http://albums.phanfare.com/slideshow.aspx?i=1&db=1&pw=WXM5Gc2m&a_id=14354570
மெய்கண்டான் மகா வித்தியாலயம் - நடனத் துறை மேம்பாட்டு நிதி
மெய்கண்டான் மகா வித்தியாலய நடனத் துறை மேம்பாட்டிற்கென ஆஸ்திரேலிய மெல்பெர்ன் நகர நடனாலயா நடனக் கல்லூரி இயக்குனர் திருமதி மீனா இளங்குமாரன் அவர்களால் வழங்கப்பெற்ற ரூபா 45000 அவர்கள் சார்பில் முன்னாள் அதிபர் வ.ஸ்ரீகாந்தன் அவர்களால் வித்தியாலய அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது .
Subscribe to:
Posts (Atom)



