Saturday, 8 October 2016

துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு - ஐக்கிய இராச்சிய பழைய மாணவர்கள் சார்பில்

   ஐக்கிய இராச்சியத்தில் வதியும்  விக்ரோரியாக் கல்லூரி   பழைய மாணவர்களும் எமது கல்லூரி வளர்ச்சியிலும் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திலும் கரிசனை கொண்டவர்களுமான  திரு.தா.கமலநாதன் ,திரு.பா.ஆனந்தகுமார் ஆகியோர் ,அண்மையில் ஐக்கிய இராச்சியம் சென்ற பழைய மாணவர் சங்கத் பொருளாளர் திரு.வி.உமாபதி அவர்களூடாக கொடுத்தனுப்பிய ( திரு.தா.கமலநாதன்- 51468 ரூபா + திரு.பா.ஆனந்தகுமார்-  47825 ரூபா ) நிதியில்  கொள்வனவு செய்யப் பெற்ற  துடுப்பாட்ட உபகரணங்களின் கையளிப்பு நிகழ்வு 7 / 10 / 2016 அன்று வெள்ளிப் பிரார்த்தனை  நிறைவு பெற்ற பின்னர்  கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் அதிபர் ,,பழையமாணவர் சங்கத் தலைவர் திரு.அ.கிருபானந்தமனுநீதி  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வின் போது விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.சிவச்செல்வன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இச் செயல்திட்டத்திற்கு Dr.செ.கண்ணதாசன் ,திரு.ந.சிவரூபன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர் .