Tuesday, 1 November 2016

விக்ரோரியாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான ஊக்குவிப்பு நிதி

    உயர்தரம் பயிலும் பொருளாதரத்தில் நலிவுற்ற மாணவர்களிற்கான கற்றலிற்கு உதவும் நோக்கோடு ஜேர்மன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான திரு.அ.ரங்கநாதன், திரு.ச.பாலகிருஷ்ணன் ( Bala Master)                                                                                                                                                                    ,கலாநிதி நா.பாலமுருகன்,திரு..சி.தவராஜா,திரு.மா.சோமசுந்தரம்,திருமதி.சோ.கோடீஸ்வரி ஆகியோரால் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி அவர்கள் அண்மையில் ஜேர்மன் சென்றிருந்த போது வழங்கப்பெற்ற நிதியில் இருந்து 2016 நவம்பர்   தொடக்கம் 2017ஜூலை வரையிலுமான திட்டத்தின் ஆரம்ப கட்ட கொடுப்பனவாக தலா  ரூபா 2000 , 1 நவம்பர் ஆகிய இன்று சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின்போது பயன் பெறும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.நிகழ்வின்போது உயர்தர வகுப்பாசிரியர்களான திருவாளர்கள் நா.ரமணன் ,த..சத்தியசீலன், செ.றோகேசியன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.