Thursday, 19 April 2012

கல்லூரியின் சாரணர் குழுவின் வளர்ச்சிக்கான நன்கொடை


யுகே பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் திரு.ரவிசங்கர் அவர்கள் எமது கல்லூரியின் சாரணர் குழு எண்பதுகளில் இருந்த தொகையை விட நூறு பேர் கொண்ட ஒரு புதிய சாரணர் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான சாரணர் சீருடைகள் ,பட்டிகள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பதற்க்குமுன் வந்துள்ளார் .இதன் முதற்க் கட்டமாக 26 சாரணர்களுக்குத் தேவையான சீருடைகள் பட்டிகள் வழங்கப்பட்டுள்ளன .இதன் காரணமாக இன்னும் பல மாணவர்கள் தாங்களும் சாரணர் குழுவில் இணைய முன் வந்து கொண்டு இருக்கிறார்கள் .இந்த முயற்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் எமது கல்லூரி சாரணர் குழு யாழ்மாவட்டத்தில் ஒரு சிறந்த சாரணர் குழுவாக திகழ வேண்டும் என்ற இவரின் முயற்சிக்கு கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்கள் எல்லோரும் தமது பூரண ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இது போன்ற திட்டங்கள் வெளிநாடுகளில் வசித்துவரும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் எல்லோரும்
முன் வந்து செயற்பட வேண்டும் என்பதே யுகே பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளாகும் .