இலண்டனில் வசிக்கும் சுழிபுரம்
விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவி திருமதி .தேன்மொழி -சாம்பசிவம் அவர்கள் எமது
கல்லூரியின் நூலகப் பயன்பாட்டிற்குத்
தேவையான ஆறு இரும்பாலான புத்தக அலுமாரிகளை வாங்குவதற்குரிய ஒருஇலட்சம் ரூபா
பெறுமதியான பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாகக் கொடுத்து
உதவியுள்ளார் .இவரின் இந்த நற்பணியைப் பாராட்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்கள் யாவரும் தமது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறார்கள் .
எமது கல்லூரியின் வளர்ச்சி
வெளிநாடுகளில் இருக்கும் பழைய மாணவர்களின் கையில் தான் உள்ளது .நாம் படித்த
கல்லூரியை மறக்காமல் எமது பெற்ற தாய்க்கு சமமாக கல்லூரியை மதித்து ஏனைய பழைய
மாணவர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதே யுகே பழைய மாணவர்
சங்கத்தின் வேண்டுகோளாகும் .