சிற்றுண்டிச்சாலை அமைக்கும் திட்டம் எமது கல்லூரியில் கல்விகற்கும் ஆயிரத்து இருநூறு மாணவர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டமாகும் .தற்போது கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை ஒரு சிறிய அறையொன்றில் நடாத்தப்பட்டு வருகின்றது .இதனால் எமது மாணவர்கள் பெரிய அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் .அத்துடன் கல்லூரிக்கு வருகின்ற சிறப்பு விருந்தினர்களையும் நல்ல முறையில் உபசரிக்க முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது .அத்துடன் சுகாதார அதிகாரிகளும் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அத்தியாவசியமான தேவை என்பதனை வலியுறுத்தி உள்ளார்கள் .
எல்லாவற்றையும் நன்கு அறிந்த கல்லூரி
நிர்வாகம் கல்லூரிக்கு நல்ல வசதியுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை தேவை என
முடிவெடுத்தனர் .அதற்கு இணங்க கடந்த கால யுகே பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு
.உலகநாதன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சிற்றுண்டிச்சாலை ஒன்றை அமைத்துத் தரும்படி
கேட்டுள்ளனர் .இத்திட்டத்தையும் யுகே பழைய மாணவர் சங்கம் ஏற்றுக் கொண்டு அதன் படி
இத்திட்டத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் விக்ரோறியாக்
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அனைத்து வேலைத்திட்டங்களையும்
செய்து வருகின்றது .இத்திட்டம் யுகே பழைய மாணவர் சங்கத்தால் வெகு விரைவில் எமது
கல்லூரிக்குச் செய்து கொடுக்கப்படும் .