இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பரீட்சை மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே வெளியாகியிருந்தது.
எனவே பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்தும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.