Wednesday, 2 January 2013

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

இலங்கையில் உள்ள பாடசாலைகள் யாவும் 2013ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பமாகின்றன.
யாழ்ப்பாணத்தில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்படும்நிலையங்களாக செயற்படுவதால் அவை எதிர்வரும் 9 ஆம்திகதி ஆரம்பமாக உள்ளன.