சோழியபுரம் கிராமத்தில் பிறந்த
மதிப்பிற்குரிய சமூக சேவையாளர் திரு .கா .இந்திரராஜா அவர்கள் தனது
கல்வியினை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் மேற்கொண்டு அதே கல்லூரியில்
ஆசிரியராக பணியாற்றியதுடன் உதவி அதிபராகவும் கடமையாற்றி ஒய்வு பெற்றுள்ளார்
.பறாளாய் முருக பக்தரான அன்புக்குரிய திரு .இந்திரன் ஆசிரியர் அவர்கள்
எமது சுழிபுரம் கிராமத்தின் வளர்ச்சிக்கும் ,கல்லூரியின் அபிவிரித்திக்கும்
தொடர்ந்தும் அயராது உழைத்து வருவது அவரின் சிறந்த உயர்ந்த பண்பையும்
,பணியையும் எடுத்துக் காட்டுகின்றது .
இன்று எமது கல்லூரியின்
மதிப்பிற்குரிய திரு .இந்திரராஜா ஆசிரியர் அவர்கள் சிறந்த மனிதராகக்
கெளரவிக்கப்பட்டது யாவரினதும் பாராட்டிற்கு உரியதாகும் .
இவருடைய சேவை
மேலும் ,மேலும் தொடர பறாளாய் முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.
தா . கமலநாதன்
செயலாளர்
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.