Saturday, 15 June 2013

Provincial Level - Cricket Champions 2013

வட மாகாணப் பாடசாலை அணிகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது வவுனியாவில் நடைபெற்றுவருகின்றது. பெண்களுக்கான துடுப்பாட்டப்போட்டி இன்று நடைபெற்றபோது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி தான் பங்குகொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது. அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் பெண்களுக்கான மென்பந்துத் துடுப்பாட்டம் 2010ஆம் ஆண்டில் அறிமுகஞ்செய்யப்பட்டது. அன்றிலிருந்து இவ்வருடம் வரை தொடர்ச்சியாக நாலாண்டுகள் மாகாணமட்டச் சம்பியன்களாக விக்ரோறியாக் கல்லூரியே வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இறுதிப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துடன் போட்டியிட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி மிக இலகுவாக தனது இலக்கை அடைந்து 8 விக்கட்டுக்களினால் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை வெற்றிகொண்டு தொடர்ச்சியாக நாலாவது வருடமாக சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
See Photos