Monday, 5 August 2013

2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (05/08/2013) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உதயன் இணைய செய்திப் பிரிவு  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.

அதன்படி இன்று ஆரம்பிக்கப்படும் பரீட்சைகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும். எனவே பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்,

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும்.

பரீட்சை மண்டபத்திற்குச் செல்லும்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை மாணவர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நடைபெறுகின்ற இவ்வாண்டு பரீட்சைக்கு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் படி 2 இலட்சத்து 92ஆயிரத்து  706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35ஆயிரத்து 318 பாடசாலை பரீட்சார்த்திகளும், 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். அதேபோல பழைய பாடத்திட்டத்தின் படி 12 ஆயிரத்து 146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடு முழுவதிலும் இரண்டாயிரத்து 164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென ரத்மலானையிலும், தங்காலையிலும் பரீட்சைகள் நடத்தப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த வேண்டாம் எனவும் பரீட்சை மண்டபத்திற்குள் ஒலி எழுப்பக்கூடிய பாதணிகளை அணிந்து வர வேண்டாம் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இ