இன்று இரண்டாந் தவணை நிறைவுநாள். எமது கல்லூரிக்கும் நிறைவான நாள். தவணைப் பரீட்சை முடிவுகள் வெளியாகி முதன்னிலை பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளித்தல், தவணைப் பரீட்சைகளில் உயர்புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகள் என நடந்த நிகழ்வுகளுடன் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் ”விக்ரோறியன்” ஆனந்தகுமார் வருகை தந்து விளையாட்டுத்துறையில் உள்ள மாணவர்களுக்கு தொப்பி, பயிற்சியுடைகள், கோலவுடைகள், உபகரணங்கள் என வழங்கி அவர்களைக் குதூகலப் படுத்திய நாள். அத்தோடு அம் மாணவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் வகையில் துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, வலைப்பந்தாட்டம், மெய்வன்மைப் போட்டிகளில் பங்குகொள்ளும் அனைவருக்கும் உரிய பயிற்சிகளும் உற்சாக வார்த்தைகளும் என உயர்வு கொடுத்த நாள்.
ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியம் தமக்கு கல்வி வழங்கிய விக்ரோறியா அன்னையை ஆனந்தப்படுத்தி செய்யும் பல செயற்றிட்டங்களில் ஒன்றாக இன்று ஆனந்தகுமார் வழங்கிய உந்துதல்கள் அமைந்தன. மாகாண மட்டத்தில் மெய்வன்மைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் DSI நிறுவனம் நடாத்திய கலப்பந்தாட்ப் போட்டிகளில் யாழ் மாவட்ட சம்பியனான வீரர்களும் ஆனந்தகுமார் அவர்களின் கரத்தால் கௌரவம் பெற்றனர். பெருமளவிலான பெற்றோர்கள் இந்நிகழ்வுகளின்போது வருகை தந்து தம் பிள்ளைகள் பற்றிய வெற்றிகளில் ஆனந்தமடைந்தனர். அதிபர் ஆசிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்திலும் மாணவர்கள் உற்சாக மிகுதியிலும் திழைத்தனர்.
See Photo Set1
See Photo Set2
Videos Coming Soon