ஐக்கிய ராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து மூன்று தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்த 2ம் திகதி தவணை நிறைவு நாளில் கல்விசார் செயற்பாடுகளில் ஒன்றாக உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கினார். விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான உடைகள், தொப்பிகள் போன்றவற்றை வழங்கினார். விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு செயலமர்வுகனை நடாத்தி ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடல் தகுதியைப் பேணுதல், உணவுப் பழக்க வழக்கங்கள், விளையாட்டு மைதானத்தில் கைக்கொள்ளவேண்டிய பண்புகள், பயிற்சிகள் எனப் பல விடயங்களை கலந்துரையாடினார். மைதானத்தில் மாணவர்களுக்கு பல்துறை விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கினார். சாரண மாணவர்களுடன் கருத்தரங்குகளை நடாத்தினார்.கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற பெண் சாரணியர் பாசறையை தொடர்ந்து இன்று பாசறைத் தீ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றி பெண் சாரணியர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார். விக்ரோறியாவில் பெறுமதியாக தனது மூன்று தினங்களை செலவு செய்து கல்லூரி மீது தான் கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்தினார். கல்லூரிச் சமூகம் அவருக்கும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
See Photos
See Photos