கல்லூரியில் விஜயதசமி
விழா நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்துமன்றத்தின் ஒழுங்கமைப்பில்
நடைபெற்ற இந்நிகழ்வில் சிவகாமி சமேத நடேசப் பெருமானுக்கும் சரஸ்வதி தேவிக்கும்
விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.பாடப்புத்தகங்கள், சங்கீத நடன உபகரணங்கள்,
விளையாட்டு உபகரணங்கள் பூசையில் வைக்கப்பட்டு அதிபரால் மாணவர்களுக்கு நாட்பாடம்
நடாத்தப்பட்டது. ஏடு தொடக்கும் நிகழ்வில் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு
அதிபர் மூலம் அதனை மேற்கொண்டனர். மாணவர்களின் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகளும்
நடைபெற்றன.