நான் இளைய
சமுதாயத்துக்காக ஓர் அமைப்பை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று
யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் அமைப்பு . அந்த அமைப்பின் முக்கிய
நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன
செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, நம்மவர் மனதில் உருவாக்குவதுதான். 10
இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான்
இந்த அமைப்பின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு
மட்டுமே வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது.. ஊழல் செய்ய தூண்டுகிறது . அந்த
எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை,
குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.
'நான்
என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம்மவர்க்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்கு மட்டும் தான்
வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். நம்மவர்களே நீங்கள் எல்லோரும்
இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!'' நமது வழத்தை கட்டி எழுப்புவோம்.
அப்துல் கலாம்