எங்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும்
ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளருமாகிய திரு .மனோகரன் குடும்பத்தினர் கடந்த மாதம் கல்லூரிக்கு
விஜயம் செய்து கல்லூரி நிர்வாகத்துடனும், அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களுடனும்,
கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் எமது ஒன்றியத்தின் சிறந்த வேலைத்திட்டங்களான
Ridge Way மண்டப புனரமைப்பு, புதிய சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை பார்வையிட்டதுடன் கல்லூரி
வளர்ச்சித் திட்டங்களையும் கேட்டு அறிந்து
கொண்டார். அத்துடன் மாணவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உபகரணங்களுக்காக 20 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரின் இந்தச் சேவையை யுகே பழைய மாணவர்
ஒன்றியம் மிகவும் பாராட்டுகின்றது.
நன்றி .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.