தரம் 6ஆம் வகுப்பு முதல் தரம் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான
ஆண்டிறுதிப் பரீட்சைகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. தரம் 9, தரம் 11 ஆகிய
வகுப்புக்களுக்கான பரீட்சைகள் வடமாகாண கல்வியமைச்சினாலும் தரம் 6,7,8,10
என்பவற்றிற்கான பரீட்சைகள் வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினாலும் உயர்தர
வகுப்புக்களுக்கான பரீட்சைகள் தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தினாலும்
நடாத்தப்படுகின்றன. எதிர்வரும் 06.12.2013ஆம் திகதி கல்லூரி தவணை விடுமுறைக்காக
மூடப்படவுள்ளது. அன்றைய தினம் தமது பிள்ளைகளின் தேர்ச்சியறிக்கைகளைப்
பெறுவதற்காகவும் விடைத்தாள்களைப் பார்வையிடவும் பெற்றோர்கள் கல்லூரிக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.