ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பு எமது கல்லூரிக்கு உள்ளகத் துடுப்பாட்டப் பயிற்சித் தளமொன்றை அமைத்துத் தர முன்வந்துள்ளனர். கல்லூரியின் தோற்பந்து துடுப்பாட்ட அணியின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முகமாக அத்தளம் அவர்களால் அமைக்கப்படுகின்றது. கல்லூரி மைதானத்தின் தென்மேற்குப் பகுதியில் இதனை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் மூன்று லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான இத்தளம் -லங்கா கிரிக்கட் அமைப்பின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவர்களது தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் வழிப்படுத்தலில் தமது பணியாளர்களைக் கொண்டு உருவாக்குகின்றனர். எமது கல்லூரியின் துடுப்பாட்ட அணிப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்களும் துடுப்பாட்டப் பயிற்றுனர்கள் திரு.ந.சிவரூபன், திரு.மு.தவராஜா ஆகியோரும் மேற்பார்வை செய்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளில் இத்தளம் அமைக்கப்படுகின்றது.