Sunday, 24 November 2013

Colours Night

இவ்வருடம் தேசியமட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவப்படுத்தும் ”வர்ண இரவுகள்” (Colours Night) விழா எதிர்வரும் 28-11-2013 வியாழக்கிழமை மாலை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
எமது கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட மெய்வன்மைப் போட்டிகளில் 19 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்று வெள்ளிப் பதக்கம் (Silver Medal) பெற்ற செல்வி.பா.றஜிதா இக் கௌரவத்திற்குரியவராகவுள்ளார். 
இவருடன் பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரும் இவ்விழாவுக்கு விசேடமாக அழைக்கப்பட்டவர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வர்ண இரவுகள்” நிகழ்வில் வடமாகாணக் கல்வி அமைச்சர் திரு.குருகுலராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.