Tuesday, 31 December 2013

New Year Message from Victoria College Principal

2013ஆம் ஆண்டு விடைபெற 2014ஆம் ஆண்டு உதயமாகிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 2013ஆம் ஆண்டில் எமது கல்லூரி சகல துறைகளிலும் வளர்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. பொதுப்பரீட்சை அடைவுமட்டங்கள் அதிகரித்துள்ளன. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிகளவு முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மாணவர்கள்  சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 
2013ஆம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி சென்ற வருடங்களை விட கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை இரு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். தேசிய மட்ட மெய்வன்மைப் போட்டிகளில் வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளிப்பதக்கம் வெல்லப்பட்டுள்ளது. 
நீண்டகாலக் கனவாயிருந்த இரண்டு திட்டங்கள் நனவாகியுள்ளன. தரமான தேநீர்ச் சாலை ஸ்தாபகர் குடும்பத்தினரதும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தினதும் அனுசரணையில் நிறைவாகியுள்ளது. பழைய மாணவர் சங்கம் 400m ஓடுபாதை கொண்ட மைதான அமைப்புக்கான காணியினை கனடா பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளது. இவ்விரு திட்டங்களையும் செயல் வடிவப்படுத்திய 2013 மறக்கமுடியாத ஆண்டாகும். அத்துடன் அரசாங்கத்தின் இசுறு திட்டத்தின் கீழான பௌதீக வள உபகரிப்புக்களும் நிறைவடைந்துள்ளன. 
இவ்வாண்டில் ஐக்கிய ராச்சியத்திலிருந்து திரு.க.ஆனந்தகுமார் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி ஊக்குவிப்புச் செய்திருந்தார்.
வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் நூலகங்களில் எமது கல்லூரி நூலகம் 2ஆம் இடத்தை வகிக்கும் தெரிவும் இவ்வாண்டிலேயே இடம்பெற்றது. அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கம் (மெல்போன்) 2013இன் ஆரம்பத்தில் சிறப்பான கணனிக்கூடத்தை (Asaippillai Teacher Memorial ICT Lab) அமைத்துக் கொடுத்தது. இதனூடாக க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தை அறிமுகம் செய்யக்கூடியதாக அமைந்தது. 
இவற்றினை விட பழைய மாணவர் சங்கங்கள் (சுழிபுரம், கனடா, அவுஸ்ரேலியா, ஐக்கிய ராச்சியம்) மற்றும் பழைய மாணவர்கள் விளையாட்டு, தமிழ்த் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகளுக்காக மாணவர்களின் போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கும் புலமைப்பரிசில்கள், உதவித்தொகைகள் போன்றவற்றிற்கும் 2013இல் பெருமளவில் உதவியுள்ளனர்.
இவை யாவற்றுக்குமாக விக்ரோறியா சமூகம் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றது. இவ்வுதவிகளுக்கு எமது மாணவர்கள் மிகுந்த பொறுப்புக் கூறுபவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 2014ஆம் ஆண்டு மேலும் சிறப்புத் தரவேண்டுமென வாழ்த்தி வரவேற்கின்றோம்.

Sunday, 29 December 2013

சாரணருக்கு நன்றி



கடந்த மாதம் பல இலட்சம் ரூபா செலவில் அதிகளவு நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கட்டப்படுள்ள பாரதி முன்பள்ளியின் திறப்புவிழாவிற்கு சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் செல்வன் – நிரோஜன் தலைமையில் சாரணர் உறுப்பினர்கள் பல நற்சேவைகளை வழங்கியுள்ளார்கள். இவர்கள் செய்த நற்சேவையில் எமது திறப்புவிழா சிறந்த முறையில் நிறைவுபெற்றுள்ளது.
எமது கல்லூரி சாரணர்களின் சேவைக்கு பாரதி முன்பள்ளியின் நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
செல்வன் – நிரோஜன் இந்த வருடம் எமது கல்லூரியின் சார்பில் ஜனாதிபதி விருதை பெறுவதற்கான தேர்வில் பங்குபற்ற உள்ளார். இவர் ஜனாதிபதி விருதைப்பெற எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றது .
எமது கல்லூரியின் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி விருதைப்பெற்றவர் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் திரு .சி .ஸ்ரீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
                               நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Isuru Scheme

இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் எமது கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான மலசலகூடத்தொகுதிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய வாசல் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்தாண்டுக்கான பாடசாலைச் செயற்பாடுகள் ஆரம்பிக்க முன்னதாக இவ் வேலைகள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பு அலுவலர் அறையுடன் கூடியதாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Wednesday, 25 December 2013

Our Library Second Best in Northern Province

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்திய மாகாண மட்ட நூலகப்போட்டி - 2013ல் எமது கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மிகுந்த போட்டிகளுக்கு மத்தியில் தரமான நூலகமாக மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியலில் வட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை வென்றதன் மூலம் 15,000/- பணப்பரிசும் கிடைத்துள்ளது. நூலகப் பொறுப்பாசிரியர்களான திருமதி.ராதிகா பாலமுரளி, திரு.கு.ஜேம்ஸ் பஸ்ரியன் மற்றும் உதவியாளரான செல்வி.வ.சுசிகலா ஆகியோரின் பங்களிப்புடன் கல்லூரி நூலகம் சிறப்பான நிலையிலுள்ளமை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

See More Photos

Fare well Party

எமது கல்லூரியில் 24 வருடங்கள் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.அரியமலர் சற்குணசிங்கம், 22 வருடங்கள் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.செல்வராணி தேவராஜா ஆகியோரின் சேவைநலன் பாராட்டு விழா அண்மையில் கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் சிரேஸ்ட மாணவ முதல்வி செல்வி.த.நிதுஷா தலைமையில் நடைபெற்றது. எமது முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, தற்போதைய அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். உடல் நலக்குறைவால் திருமதி.அரியமலர் சற்குணசிங்கம் அவர்கள் கலந்து கொள்ளமுடியவில்லை. தங்கப் பதக்கமம் அணிவித்தும் பரிசுகள் வழங்கியும் வாழ்த்துப்பா வாசித்தளித்தும் மாலைகள் அணிவித்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வு பெற்றவர்களைக் கௌரவம் செய்தனர். பலர் இருவரது சேவையையும் புகழ்ந்து பாராட்டினர். இவ்வாசிரியர்கள் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி கல்வி மற்றும் ஏனைய துறைகளில் மாணவர்களை உயர்த்திவிட்டவர்கள் என்பதும் இவர்களிடம் கற்ற பல மாணவர்கள்  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்நிலைகளில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 

Monday, 23 December 2013

கல்லூரியின் பரீட்சை முடிவுகள்

இந்த வருடம் வெளியாகியுள்ள க .பொ .த .உயர்தரப்பரீட்சை முடிவுகள் எமது விக்ரோறியாக்கல்லூரி மாணவர்கள் சராசரியாக தரமான பெறுபேறுகளை பெற்றிருப்பது எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது .கணிதம் ,விஞ்ஞானம் ,வர்த்தகம் போன்ற பாடங்களில் எமது கல்லூரி மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்று வருவது கல்லூரியின் வளர்ச்சிக்கும் ,மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உந்துகோலாக இருக்கின்றது .
எமது கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் யாவரினதும் முயற்ச்சியினால் எமது கல்லூரி யாழ் மாவட்டத்தில் தரமான கல்லூரிகள் வரிசையில் இடம் பிடித்துக்கொண்டிருப்பது வெளிநாடுகளில் பரந்து வாழும் விக்ரோறியன்கள் மனதையும் சந்தோசப்படுத்தி வருகின்றது .எமது கல்லூரி மாணவர்கள் கல்வி தவிர்ந்து ,விளையாட்டு,கலைத்துறைகளிலும் முன்னேறி வருவது யாவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது .

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் யாவரும் பாராட்டுக்களையும் ,மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
                           நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Cricket Net Code

கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பயிற்சித் தளம் (Net code)  இன்றைய தினம் துடுப்பாட்ட வீரர்களின் பாவனைக்கு விடப்பட்டது. துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன், துடுப்பாட்டப் பயிற்றுநர் திரு.ந.சிவரூபன் ஆகியோரின் முயற்சியால் SriLanka Cricket அமைத்துத் தந்த மேற்படி தளத்தில் வீரர்கள் தமது பயிற்சிகளை உற்சாகமாக ஆரம்பித்துள்ளனர். இதன் போது அதிபர், பொறுப்பாசிரியர், பயிற்றுநர்ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

Saturday, 21 December 2013

திரும்பி பார்ப்போம்

25 வருடங்களுக்கு முன்பு எமது கிராமமான சுழிபுரம் சோகத்தில் ஆழ்ந்த நாள் டிசம்பர் 21 திகதி ஆம்மாம் சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவர்களும் எமது கிராமத்தின் துடிப்பு மிக்க இரு இளைஞ்ஞர்கள் ஆனா முரளி மற்றும் தம்பா  அன்னிய நாட்டவர்களால் படுகொலை செயப்பட்ட நாள்,1988ம் ஆண்டு அந்த காலை வேலை திருவெண்பாவை நடைபெறும் நேரம் இந்த சேதி கிடைத்தவுடன்
எமது கிராமம் செயல் இழந்து நின்றது வீசும் காற்றில் ஆடிகொண்டிருந்த மரங்கள் மற்றும் நெல் பயிர்கள் அப்படியே நின்ற நாள்.அந்த இரு இளரத்தங்கள் எம்மை விட்டு பிரிந்து 25 வருடங்கள்
சென்றாலும் அவர்களின் நினைவு எம்மையும் எமது கிராமத்தையும் விட்டு செல்லாது அவர்களது ஆத்தமா சாந்தியடைய எல்லாம் வல்ல பறாளை முருகனையும் கம்பனை தாயையும் வேண்டுவோம்.

Friday, 20 December 2013

A/L Results 2013


J/Victoria College
G.C.E.A/L Examination 2013

Name
Phy.
Che.
Bio.
C.Ma.
Econ.
B.Stu.
Acc.
G.Eng.
C G T
Rank
Z Score
S.Sharuja
A
B

A



B
80
45
1.9571
T.Chenthan
A
C

A



C
80
50
1.9206
I.Karthiga
B
B

A



C
68
83
1.7504
P.Arulrasa
C
S

B



S
70
311
0.8671
K.Partheepan
C
S

C



C
57
342
0.7350
G.Ananthan
B
S

C




67
345
0.7324
G.Muraleetharan
C
S

S



S
60
485
0.2842
J.Sanjeevan
S
S

S




60
571
0.0248
S.Sutharsan
S
S

S



C
65
585
-0.0171
N.Tharmini
S
S

S




52
588
-0.0311
S.Sivashankar
B
A
C





55
110
1.4144
M.Pratheepan
C
C
B





55
180
1.1319
S.Paheirathan
C
C
C





47
217
0.9554
S.Karunya
S
C
B




S
50
225
0.9311
S.Niroshana
S
C
C




S
55
365
0.4743
K.Nalajini
S
S
C





48
452
0.2235
K.Kabilan




B
B
B
                
53
96
1.2679
K.Kayithiri




C
C
A
S
63
213
0.8026
Y.Yokitha




C
C
B
S
55
319
0.5355
V.Sooriyapragash




C
C
C
C
43
362
0.4468
K.Kajanthan




C
C
S
S
42
404
0.3268
K.Tharani




C
S
S
S
33
505
0.1494
T.Prasanna




C
S
S

45
591
-0.0209
Y.Piriyanka




S
S
S

43
633
-0.1059
V.Sarankan




S
S
S

45
758
-0.3798


















































































































J/Victoria College
G.C.E.A/L Examination 2013

Name
Econ.
Geo.
Po.Sc.
Log.
His.
Hin.Civ.
Dra.
Art
Dan.
Mus.
Tam.
G.Eng.
C G T
Rank
Z Score
T.Tharshika


B



A



B
B
47
41
1.7375
P.Sivapriya




A




A
C

58
121
1.4980
V.Kavitha




A
A




C

38
173
1.4009
K.Karunya

C


A





A

55
183
1.374
K.Kathjayini

B



A




B

48
186
1.3682
B.Desintha




B




A
C

42
217
1.3279
T.Rajikka


C

A





B

33
241
1.3036
S.Mayuran


B

B





C

35
273
1.2567
S.Jatheesan




A

A



C

35
279
1.2497
P.Vasiththira

B


A





C

40
353
1.1572
S.Shivany


C


A




C

28
425
1.087
S.Thanaraj


B




B


C

32
545
0.9769
T.Sivakanga


B
A






S

60
555
0.9684
K.Kapilraj




A


C


C

48
572
0.9570
A.Nishanthini


C


A




C

35
588
0.9395
S.Sugikaran

C





B


B

47
632
0.9006
V.Renaath


C




C


B

45
659
0.8786
J.Vaikunthan


C
C






C

37
666
0.8693
N.Narayani


B





C

C
S
38
822
0.7603
V.Kobika




C

B



B
S
40
864
0.7351
T.Gowsala


S


A




S

33
966
0.6669
M.Mekala

B




B



S

37
990
0.6481
R.Thanisa


C


A




S

33
1012
0.6398
N.Niranjana


C

C





C

43
1060
0.6091
M.Kobiga

S







B
S

30
1148
0.5543
S.Sujenthini

C





C


C

38
1162
0.5477
K.Thanusa


C





C

C

35
1435
0.3797
T.Lojanan


C

C





C

38
1529
0.3214
S.Nitharsan

C





C


C

42
1534
0.3182
S.Sajintha

C





C


S

55
1727
0.2010
N.Vakshitha


S


B




S

30
1871
0.1061
K.Sritharan


S
C






S

37
1992
0.0298