யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் விக்ரோறியாக் கல்லூரியின் உயர்தர மாணவர்களின்
வளர்ச்சிக்காக கல்வியாண்டு (1993,94,95 ) பழைய மாணவர்களால் நடாத்தப்படும்
கல்விக் கருத்தரங்கு எதிர்வரும் மாசிமாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும்
, 8 ஆம் திகதி சனிக்கிழமையும் காலை 11:00
மணி தொடக்கம் மாலை 15:00 மணி வரை விக்ரோறியாக் கல்லூரி “Ridge Way “ மண்டபத்தில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது .
இக் கருத்தரங்கை நடாத்துவதற்காக கல்லூரிப் பழைய மாணவர்களான கலாநிதி .வேல்நம்பி
பீடாதிபதி கணக்கியல்துறை யாழ் பல்கலைக்கழகம்,
திரு .வ .ஜெயரூபன் பொருளியல் விரிவுரையாளர்
பாடசாலை சமூக மேம்பாட்டு திணைக்களம் கொழும்பு ,திரு .ஜெயக்குமார் பொருளியல் ஆசிரியர்
வசாவிளான் மத்திய கல்லூரி ,ஆகியோர் இக் கருத்தரங்கில் விரிவுரை செய்ய உள்ளார்கள் .
இக் கருத்தரங்கு 2013 ஆம் ஆண்டில் வெளியான க.பொ .த
உயர்தரப் பரீட்சை முடிவை ஆராய்ந்த பின் எமது கல்லூரி மாணவர்கள் கணக்கியல் ,பொருளியல்
ஆகிய பாடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தர இக் கருத்தரங்கு உறுதுணையாக அமையும்
.
கருத்தரங்கின் முடிவில் மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது .இந்த ஒன்றுகூடலில்
கலந்து கொள்ள விரும்புவோர் திரு .க .விநோதனுடன் தொடர்பு கொள்ளவும் .தொடர்பு கொள்ளவேண்டிய
தொலைபேசி இலக்கம் 00447576661978 ,மின்னஞ்சல் vinothk1975@yahoo.co.uk
.
இக்கருத்தரங்கை நடாத்த முன் வந்த பழைய மாணவர்களுக்கு எமது நன்றிகள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .