ஆங்கில மொழியில் மாணவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுமுகமான ஒரு நிகழ்ச்சித்
திட்டம் எமது கல்லூரியில் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக லண்டன் வாழ்
திரு.செந்தில்குமரன் அவர்களின் உதவியுடன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலப்
புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இலகு மொழி நடையில் அமைந்த இந்தப் புத்தகங்கள் குட்டிக்
கதைகள், கட்டுரைகள், கடிதம் எழுதும் முறைகள் எனப் பல்வேறு வகை சார்ந்தவையாக உள்ளன.
கப்பல் மூலம் லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட இந்நூல்களை கல்லூரியின் பழைய மாணவர்
சங்கத தலைவர் திரு.வி.உமாபதி அவாகள் கொழும்புத் துறைமுகத்தில் பொறுப்பேற்று
கல்லூரியில் ஒப்படைத்தார். சென்ற வாரம் கல்லூரிக்கு வருகை தந்த திரு.செந்தில்குமரன்
மேலும் ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியதோடு நூலகத்தை பயன்படுத்தி வந்த
மாணவர்களுடன் ஆங்கில மொழியின் முக்கியத்தவம் மற்றம் அதனை இலகுவாக கற்பது தொடர்பான
நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி வழிப்படுத்தினார். எமது கல்லூரியுடன் எவ்வித
தொடர்புமற்ற இவர் வழங்கிய இச் சேவையை கல்லூரிச் சமூகம் நன்றியுடன்
பாராட்டுகின்றது.