Thursday, 27 February 2014

  சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தினர் நடாத்தும் சிவராத்திரி தின நிகழ்வு சுழிபுரம் கதிர் வேலாயுத சுவாமி கோவிலில் சிவராத்திரி தினத்தன்று முன்னிரவு 9 மணி முதல் நடைபெறும். நிகழ்வுகளிற்கான அனுசரணையை சிவராத்திரி உபயகாரர் திரு.கா.அரிசந்திதிரா அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

மரண அறிவித்தல் கிருஸ்ணபிள்ளை கணேசன்

இறப்பு
2014-02-24  

காளுவன், சுழிரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை கணேசன் நேற்று முன் தினம்(24.02.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அராலியைச் சேர்ந்த தர்மலிங்கம்நாகம்மா தம்பதியரின் அன்பு  மருமகனும், மனோன்மணியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் நடராசா (லண்டன்), காலஞ்சென்ற தவராசா மற்றும் பூபதி (சுவிஸ்), ஞானாம்பிகை, அன்னபாக்கியம், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பாக்கியலச்சுமி, காலஞ்சென்ற விஜயபாலன் மற்றும் செல்வராசா (சுவிஸ்), காலஞ் சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், றஞ்சிதமலர் (ஆசிரியர், உடுவில் மகளிர் கல்லூரி),மாலினி(ஆசிரியர், யா/சுழிபுரம்  விக்ரோரியாக் கல்லூரி, சுழிபுரம் வடக்கு ஆறுமுகம் வித்தியாசாலை), சுமதி (கனடா),மனோகரன் (ஆசிரியர்,மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலயம்,உடையார்கட்டு),தர்மினி ஆகியோரது பாசமிகு தந்தையும், சிவகுமார் (சிவகுமார் ஸ்ரோர்ஸ், மானிப்பாய்), மனோச்குமார்(மனோ போட்டோ சுழிபுரம்), நந்தராஜ் (கனடா), நந்தினி, கிருஸ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனும்,மதுசன், மதுசாயினி, டிரோசினி, டிரோசன்,மேருசன், கிருசாந்,கேசாயினி, டிசானன், உசாங்கன், தஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2014) வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Tuesday, 25 February 2014

Chankanai Educational Division - Major Games

சங்கானைக்  கல்விக்  கோட்ட ப்  பாடசாலைகளுக்கிடையிலான  பெரு  விளையாட்டுப்  போட்டிகள்  தற்போது ஆரம்பமாகி  நடைபெறுகின்றன.    இதுவரை  நடைபெற்ற  போட்டிகளில்  எமது  கல்லூரி  6  குழுக்கள் முதலாமிடத்தையும்  2  குழுக்கள்  இரண்டாமிடத்தையும்  பெற்றுள்ளன.  

மென்பந்து  துடுப்பாட்டம்  -  ஆண்கள்  1ம் இடம்
மென்பந்து  துடுப்பாட்டம்  -  பெண்கள்  1ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  ஆண்கள்  15 வயதுப்  பிரிவு  -  1ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  ஆண்கள்  17 வயதுப்  பிரிவு  -  1ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  ஆண்கள்  19 வயதுப்  பிரிவு  -  1ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  பெண்கள்  15 வயதுப்  பிரிவு  -  1ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  பெண்கள்  17 வயதுப்  பிரிவு  -  2ம் இடம்
கரப்பந்தாட்டம்  -  பெண்கள்  19 வயதுப்  பிரிவு  -  2ம் இடம்

விளையாட்டுத்துறை  முதல்வர்  திரு.சி.சிவச்செல்வன், பயிற்றுநர்கள்  திரு.ந.சிவரூபன்,  திரு.தி.சுகிர்தன் மற்றும் பொறுப்பாசிரியர்களான திரு.க.திருக்குமரன்,  திருமதி.வா.சிவலோகநாதன், திருமதி.சு.சுதர்சன்,  செல்வி.கு.தாரணி,  செல்வி.தி.லயனா,  திருமதி.ச.சிறீகாந்தராஜா ஆகியோர் இவ் வெற்றிகளைப் பெற உதவியுள்ளார்கள்.

மரண அறிவித்தல்-திரு குமரப்பெருமாள் சரவணப்பெருமாள் (ஆடியபாதம்)

பிறப்பு : 27 மே 1927 — இறப்பு : 22 பெப்ரவரி 2014
யாழ். சுழிபுரம் பறளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமரப்பெருமாள் சரவணப்பெருமாள் அவர்கள் 22-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமரப்பெருமாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இலச்சுமணர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருளானந்தம்(சுவிஸ்), சாந்தினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினவேல், அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, லக்சுமி, வேலாயுதம், வடிவேல், மற்றும் சின்னத்தம்பி, சுப்பையா, ஆறுமுகம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சிறிகரன், மீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காங்கேயன்(மோகன்- ஜெர்மனி) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாலூஜா, சௌமியா, சதுர்சன், அட்ஷயா, குமரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொன்னம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213002249
அருளானந்தம்(அருள்-மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41552110354
சாந்தினி(சீதா-மகள்) — டென்மார்க்
தொலைபேசி:+4586423157

Saturday, 22 February 2014

பிரிவுபசார நிகழ்விற்கென அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க ரூபா 100 000.00 /-ஆசிரியர்கழகத் தலைவர் திரு .ஜேம்ஸ் பஸ்ரியனிடம் ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் கையளித்துள்ளது

எமது கல்லூரி கல்வி விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றில் அபரிமிதமான முன்னேற்றம் கண்டுவருவதற்கு அதிபரின் வழிகாட்டலில் செயற்படும் ஆசிரியர் குழாமே காரணம்.
அத்தகைய அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களில் 19 பேர் இடமாற்றம்பெற்றுச் செல்வது எமக்கெல்லாம் பேரிழப்பாகும்.
அதேவேளை அவர்களுக்குப் பதிலீடாக வந்துள்ள ஆசிரியர்களிடம் இதேமாதிரியான அர்ப்பணிப்பினை விநயமாக வேண்டி நிற்பதோடு அவர்களுக்கான முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என  ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.
இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் சேவையைப்பாராட்டி அவர்களிற்கு நடாத்தப்படவுள்ள பிரிவுபசார நிகழ்விற்கென அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க ரூபா 100 000.00 /-ஆசிரியர்கழகத் தலைவர் திரு .
ஜேம்ஸ் பஸ்ரியனிடம் ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் கையளித்துள்ளதுஇந்நிதியுதவியினை வழங்கிய எமது ஒன்றிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
மேலும் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அவூஸ்திரேலியா பழையமாணவர் ஒன்றியமும் ரூபா 70 000.00/- வழங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே அவர்களையும் 
 நன்றியறிதலுடன் பார்க்கின்றோம் .

Documents Archive Project Stage 1 - Prize Day Reports available to view on our website Home Page

இணையத் தளத்தில் பரிசளிப்பு விழா நூல் அறிக்கை
எங்கள் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா வெகுவிமர்சையாகவும் ,சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது .இவ்விழாவின் போது மாணவர்களின் திறமைகள் உட்பட பல்வேறு விடயங்களும் வெளிக்கொண்டு வரப்படுகின்றது .அவற்றுள் எமது கல்லூரியில் ஒவ்வொருவருடமும் நடைபெற்று வரும் அனைத்து விடயங்களையும் ஓர் சிறந்த அறிக்கைப்புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது .
இப்புத்தகத்தில் மாணவர்களின் திறமைகள் ,கல்லூரியின் அபிவிருத்தித்திட்டங்கள் ,பழைய மாணவர்கள் செய்துவரும் உதவித்திட்டங்கள் ,வெளிநாடுகளில் இயங்கிவரும் பழைய மாணவர் சங்கங்களின் வேலைத்திட்டங்கள் இவ்வாறான பல விடையங்களை உள்ளடக்கிய ஒரு பொக்கிசமாகவும் இந்நூல் இருந்துவருகின்றது .

இப்புத்தகங்களை பாதுகாத்து வைப்பது என்பது கடினமான நிலையில் உள்ளது .இப்புத்தகத்தை பாதுகாத்து வைப்பதன் மூலம் எமது கல்லூரியின் வருடா வருடம் நடைபெற்று வரும் நிகழ்வுகளை நாம் நினைவிகூர முடியும் .கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் இந்த  அறிக்கைப் புத்தகத்தை சிறந்த முறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பழமை வாய்ந்த அனைத்துப் புத்தகங்களையும் சேகரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் .அவருடன் இணைந்து DR.S. கண்ணதாசன் அவர்கள் அனைத்துப் புத்தகங்களையும் ஒவ்வொரு பக்கங்களையும் பிரதி (Scan) செய்து எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தளத்தில் திரு .சி .இரவிசங்கர் மூலம் இணையத்தளத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு வருகின்றது .

இந்த செயற் திட்டத்தை உருவாக்கிய அதிபர் திரு .வ. ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் அவரோடு தோளோடு தோளாக நின்று உழைக்கும் DR.S. கண்ணதாசன் ,திரு .சி இரவிசங்கர் ஆகியோருக்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Friday, 21 February 2014

OSA-UK Focusing on Thiruvadinilai School (திருவடிநிலை பாடசாலைக்கான நிதியுதவி)

எமது ஊட்டற்பாடசாலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவருவது திருவடிநிலை பாடசாலை ஆகும்இம்மாணவர்களின் வரவு  குறைவாக இருப்பதோடு கற்றலில் ஊக்கம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
எமது ஒன்றியமானது காட்டுப்புலம் பாடசாலைக்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தினை (Dec/2013)  மேற்கொண்டதைத் தொடர்ந்து அப்பாடசாலையில் மாணவர்கள் வரவு  அதிகரித்ததோடு கற்றற் செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவதை அவதானித்த திருவடிநிலைப்பாடசாலையின் அதிபர் தமது பாடசாலைக்கும்  அப்படியான ஒரு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தினை செயற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
EDC அமைபின் தலைவரும் விக்டோரியா கல்லுரி அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் ஐயா அவர்களின் சிபார்சின் அடிப்படையில், எமது ஒன்றியம் ரூபா 30 000.00 இனை வழங்க உள்ளது.
இவ் வேலைத்திட்டத்திற்கான நிதியுதவிற்காக,  தா கமலநாதன்  15,500.00/-ரூபாவினையும்  திரு சிஇரவிசங்கர் 14,5000.00/-ரூபாவினையும் எமது ஒன்றியம் ஊடாக நன்கொடையாக வழங்க முன் வந்த்துள்ளார்கள். .இவர்கள்  எமது நன்றிக்குரியவர் ஆவார்கள்.

கம்பனை அம்மன் அபிராமிபடர் விழா படம்


Thursday, 20 February 2014

OSA (UK) Donating 75,000 Rupees to another Feeding School for getting over 70 marks in Yr 5 Scholarship Exam.




நேற்றைய தினம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின.
மேற்படி பாடசாலை விக்ரோறியாக் கல்லூரியின் ஊட்டற் பாடசாலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு கற்கும் மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறைகொண்டு அர்ப்பணிப்புடன் அப்பாடசாலை அதிபர் திரு பாலகுமாரும் ஆசிரியர்குழாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவது யாவரும் அறிந்ததே.
சுழிபுரம் கல்வியபிவிருத்திக் குழுவும்  அவ்வப்போது இப்பாடசாலை அதிபருடன் கலந்துரையாடி வேண்டிய உதவிகள் செய்து வருவது கண்கூடே.
இந்தவருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களைத் தயார்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ரூபா 100 000.00 தேவைப்படுவதாக அப்பாடசாலையின் அதிபர் கல்வி அபிவிருத்திக் குழுவிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார்.
இவ்வேண்டுகோளானது ஐக்கியராச்சியம் பழையமாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டபோது சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்தவகையில் இவ்விழாவிற் கலந்துகொண்ட கல்வியபிவிருத்திக் குழுவின் தலைவரும் விக்ரோறியாக் கல்லூரியின் அதிபருமாகிய திரு வ ஸ்ரீகாந்தன் அவர்கள் ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் மேலதிக வகுப்புகள் நடாத்துவதற்கென ரூபா 75 000.00 பெறுமதியான காசோலை ஒன்றினை வழங்கியிருந்தார்.
முன்னேற்றம் அவதானிக்கப்பட்டு மிகுதி ரூபா 25 000.00 வழங்கப்படும் என்பதனையும்  உறுதிகூறியிருந்தார்.

இந்நிதியூதவி வழங்கிய திரு சி இரவிசங்கர் மற்றும் ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்திற்கு அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்

Wednesday, 19 February 2014

OSA (UK) helping feeding school students to get over 70 marks in Yr 5 Scholarship Exam.


18/02/2014 அன்று ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தேறி உள்ளன .
ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுழிபுரம் கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபருமான திரு வ ஸ்ரீகாந்தன் தம்பதியினர் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் கல்வி அபிவிருத்திக்குழுவின் செயலாளர் DR S கண்ணதாசன், பொருளாளர் திரு து இரவீந்திரன் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் திரு  சி சிவகணேச சுந்தரன், கல்வி அபிவிருத்திக்குழுவின் வெளி நாட்டு தொடர்பாளர் திரு இந்திரராஜா,  திரு விஜய குமார், திருமதி புனிதவதி மற்றும் எமது கிராம கல்வி முனேற்றத்தின் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினர்  அதிபர் திரு.வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் உரையாற்றுகையில்   விக்ரோறியாக் கல்லூரியின் கல்வி முன்னேற்றம் ஊட்டற்பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்திலேயே தங்கி உள்ளது எனவும்  ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையே எமது பிரதான ஊட்டற் பாடசாலை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வருடத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விமுன்னேற்றச் செயற்றிட்டத்திற்கென ரூபா 50 000.00/- பெறுமதியான காசோலையினை ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை  அதிபரிடம் கையளித்தார்.

மேற்படி நிதிஉதவி திரு. சி. இரவிசங்கர் அவர்களால் ஐக்கியராச்சியம் விக்ரோறியாக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம்  சார்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை அதிபர், ஆசிரியர் பெற்ரோரின் ஒத்துளைப்புடன் இவ்வருடம் புலமை பரிசு முடிவுகளில்  முன்னேற்றம்காண உறுதிபூணுவதாகவும் ஐக்கியராச்சியம் விக்ரோறியாக்கல்லூரி பழையமாணவர் ஒன்றியத்திற்கும் திரு சி இரவிசங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்  கொண்டார்.


Monday, 17 February 2014

Coming Soon - New Projects Section for OSA(UK) English Style is the Elegant Style.

Our web team is working hard on a special task to keep you informed with details of all OSA UK projects that have already been successfully completed and all forthcoming projects. 

This section will explain to you the projects that have been

  1. Carried out for Victoria College
  2. Carried out for the feeding schools
  3. Carried out for any social welfare organisations
  4. In addition, any request submitted to our web team to publish in the website by Victoria College Principal or feeding school principals or any social welfare organisation that works within the Chulipuram and neighbouring areas will be detailed here. 
  5. We would also in this section acknowledge and thank project sponsors.             

Watch this space.

Our past and present OSA (UK) Committee members  have significantly contributed to our school and neighbouring areas.  Many of you are not aware of how many projects have been completed, what they are or even the proposed projects yet to be started.

We hope that in this new section we will fully cover all the projects and keep you up to date with what’s happening for UK members and Old Students worldwide.        

The current Victoria College Principal, Mr V Srikanthan, instigated this new section. Dr S Kannathasan, Mr T Kamalanathan and Mr S Ravisangar will assist to document and publish the project details in this section.  We hope that this will be good archive and documentary project information for OSA(UK) and our School.. The Web Team would like to thank the aforementioned people for their continued contribution and support.


English Style is an Elegant Style.

Sunday, 16 February 2014

GIT - Results

எமது கல்லூரியிலிருந்து இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்திய க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்பப் பாடப் பரீட்சைக்கு (General Information Technology) 73 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இவ்பரீட்சை சென்ற September 2013ல் நடைபெற்றது. இதன் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி 18 மாணவர்கள் A தரம் (Distinction)
16 மாணவர்கள் B தரம் (Very Good Pass)
22 மாணவர்கள் C தரம் (Credit)
16 மாணவர்கள் S தரம் (Ordinary pass)
சித்தி பெற்றுள்ளனர். ஒரேயொரு மாணவன் மட்டுமே சித்தியடையத் தவறியுள்ளார் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகைளில் இது மிகச் சிறந்த பெறுபேறாகக் கருதப்படுகிறது.

Saturday, 15 February 2014

Sports Meet - 2014

எமது கல்லூரியின் 400m ஓடுபாதை கொண்ட மைதானத்தின் முதலாவது இல்ல மெய்வன்மைப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களின் தலைமையில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.விஜேந்திர சர்மா அவர்கள் பிரதம விருந்தினராகவும் கனடா பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர் “விக்ரோறியன்” மகாராணி யோகலிங்கம் தம்பதிகள் சிறப்பு விருந்தினர்களாகவும் ஓய்வு நிலை ஆங்கில ஆசிரியர் ”விக்ரோறியன்” திருமதி.செல்வராணி தேவராஜா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என ஆயிரக் கணக்கானோர் விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டு களித்தனர். ஆரம்ப நிகழ்வுகளாக விருந்தினர்களை வரவேற்றல், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், கொடியேற்றல், அணி நடை, ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்தியப் பிரமாணம், பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தல் போன்றவற்றைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கின. அணி நடைக் குழுக்கள் பார்ப்பவர் மனதைக் கவரும் வகையில் செயற்பட்டன. அணிவகுப்பு மரியாதையை விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர். இல்ல அலங்காரங்கள் ஒவ்வொன்றும் மாணவர்களாலும் இல்ல ஆசிரியர்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாணவர்கள் மிக ஒழுங்காகவும் கட்டுப்பாடாகவும் தத்தம் இல்லங்களில் இருந்து போட்டியாளர்களை ஊக்குவித்தார்கள். இடைவேளையின் போது இடம்பெற்ற “காட்சியும் கானமும்” நிகழ்ச்சியை கண்டு அனைவரும் தம்மை மெய்மறந்தனர். எமது கல்லூரியின் முன்னாள் நடன ஆசிரியை திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இம் மாணவர்களைத் தயார்ப்படுத்தலில் “விக்ரோறியன்” செல்வி.பாதுஜா தர்மதேவன் (நுண்கலைப் பீட மாணவி) உதவியாளராக செயற்பட்டிருந்தார். விருந்தினர் உடபட கலந்து கொண்ட அனைவரும் இந் நிகழ்ச்சியை மிகவும் புகழ்ந்தனர். 
கயிறிழுத்தல், பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி, உத்தியோகஸ்தர்களுக்கான நிகழ்ச்சி என்பவற்றைத் தொடர்ந்து பரிசளிப்பு நடைபெற்றது. இம்முறை கனகரத்தினம் இல்லத்தினர் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று இல்ல மெய்வன்மைப் போட்டியின் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன் அவர்களின் நன்றியுரையுடன் இவ் வருட இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.

Monday, 10 February 2014

JVC's Old boys Race @ 400M Track


See More Photos

உள்ளூர் சமூக சமய கலை நிறுவனங்களையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் முயற்சி

சுழிபுரம் மேற்கிலே உறைந்து அருள்பாலித்துவரும் கதிர்வேலாயுதசுவாமி கோவில் கொடி ஏற்ற திருவிழா நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததேகோயில்கள் என்பவை எமது சமய கிரியா சடங்குகளுடன் மட்டும் நின்றுவிடாது எமது பிரதேச கல்வி கலை பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதற்காக மக்களை ஒன்று கூட்டும் இடம் என்பதே எமது ஒன்றியத்;தின் கொள்கைளாகும்.
அந்த வகையிலே கடந்த நான்காந் திருவிழா அன்று எமது உறுப்பினர் திரு சிஇரவிசங்கர் தனது திருவிழாவிலே ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்தார்.
பாரதிமுன்பள்ளி திறப்பு விழாவின்போது உதவிய விக்ரோறியாக் கல்லூரி சாரணர்கள் சிறந்த முறையில் வரவேற்பு நடன நிகழ்வை வழங்கிய நடனக்குழுமற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பாரதி கலைமன்றம் மற்றும் ஸ்ரீகணேசா சனசமூக நிலையம் கலைத் தொண்டாற்றிவரும் பொன்னாலை சந்திர பரத கலாலயம் என்பன திருவிழாவின்போது ஊக்குவிப்புத் தொகை வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
மேலும் கோவில் பரிபாலனசபை மற்றும் சங்காபிசேக சபை ஆகியவற்றிற்கும் நிதி தவி வழங்கப்பட்டன.
அத்துடன் பாரதி கலைமனறம் மற்றும் பாரதி முன்பள்ளி வளர்ச்சியில் முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் திரு கிருஸ்ணாகரனும்  
லயஞான செல்வர் எனும் மதிப்பினை வழங்கி கொளரவிக்கப்பட்டார்.

விபரங்கள் வருமாறு


ஊக்குவிப்புப் பெறுவோர்தொகைகௌரவித்தோர்
பாரதி கலைமன்றம் 25,000.00திரு ந  சூரியகுமார்
ஸ்ரீகணேசா சனசமூக நிலையம்20,000.00திரு வி உமாபதி;
பொன்னாலை சந்திர பரத கலாலயம்25,000.00திருவி  சிவராமன்
விக்ரோறியாக் கல்லூரி நடனக்குழுவினர்25,000.00திரு செ கண்ணதாசன்
விக்ரோறியாக் கல்லூரி சாரணர்கள25,000.00திரு சி சிவகணேச சுந்தரன்
திரு கிருஸ்ணாகரன்100,000.00திருமதி சிவசுப்பிரமணியம்
கோவில் சங்காபிசேக சபை5,000.00
கோவில் பரிபாலனசபை5,000.00
Total230,000.00

See More Photos

லயஞான செல்வர் 

400m Ground - Conferring Ceremony

எமது கல்லூரியில் 400m ஓடுபாதை கொண்ட மைதானம் இன்று மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் விழா நடைபெற்றது. பழைய மாணவர் சங்கம் பல்வேறு தரப்பினரதும் உதவிகளைப் பெற்று இச் செயற்றிட்டத்தை நிறைவாக்கியுள்ளது. 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்றிட்டம் இன்று பூர்த்தியாவது குறித்து அனைத்து பழைய மாணவர்களும் மன மகிழ்வடைந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஈ.சரவணபவன் முதன்மை விருந்தினராகவும் கனடா பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் திரு.ச.யோகலிங்கம் அவர்தம் பாரியாருடனும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர் போன்ற பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

எமது கனவு நனவாகியது

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் இன்று காலை
கல்லூரிக்கு 400 மீற்றர் ஓட்டப்பாதை உள்ள விளையாட்டு மைதானம் கல்லூரி பழையமாணவர்களாலும் தற்போதைய கல்லூரி சமூகத்தாலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களும் முன்னாள் ஆசிரியர்களும் அதிபர்களும் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர்.
சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு மிக நீண்ட நாள் கனவான 400 மீற்றர் ஓட்டப்பாதையுள்ள மைதானம் கனவாகவே இருந்து வந்த போதும் தற்போது நனவாகி உள்ளமையால் கல்லூரி சமூகம் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Saturday, 8 February 2014

Get together - G.C.E(A/L) 1994,95 & 96 Students

1994,95,96ம் ஆண்டுகளில் எமது கல்லூரியில் கல்வி கற்று க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான சந்திப்பு இன்று மாலை 3.30மணிக்கு றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 30 மாணவர்களும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். ஒரு நிமிட மௌன வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வை கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் தொடக்கி வைத்தார். இன்றைய இந்தச் சந்திப்பினை UK பழைய மாணவர் ஒன்றியத்தினைச் சேர்ந்த திரு.க.வினோதன் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார். இவருடன் திரு.ச.ஜெயக்குமார், திரு.நா.ரமணன், திருமதி.ஜெகதீஸ்வரி சுதர்சன் ஆகியோரும் இணைந்து செயற்பட்டிருந்தனர். கலந்து கொண்ட அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டதுடன் தற்போதைய தமது தொழில், குடும்ப நிலை போன்ற விடயங்களையும் கல்லூரி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்தனர். கலந்து கொண்டவர்கள் தம்மை கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினகளாக பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களையும் நிரப்பி வழங்கினர். இச் சந்திப்பின் நோக்கம், அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து திரு.க.வினோதன் விளக்கமளிக்க அவையோரும் தமது கருத்துக்களை பரிமாறினர். மாலை 6.30மணியளவில் திருமதி.ஜெகதீஸ்வரி சுதர்சனின் நன்றியுரையுடன் இச் சந்திப்பு நிறைவடைந்தது.

Seminar for G.C.E.(A/L) Commerce Students - 2nd Day

க.பொ.த.உயர்தர வணிகத்துறை மாணவர்களுக்காக திரு.க.வினோதன் அவர்களின் ஏற்பாட்டில் ஐக்கிய ராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடனான கருத்தரங்கின் இரண்டாம் நாள் விரிவுரைகள் கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றன. பிரபல பொருளியல் ஆசான் “விக்ரோறியன்” திரு.ஜெயக்குமார் பொருளியல் பாடம் தொடர்பான செயலமர்விளை முதலில் நிகழ்த்தினார். தொடர்ந்து திரு.வினோதன் அவர்களின் தொழில் வழிகாட்டல் தொடர்பான ஆலோசனையுரை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக பீட முகாமைத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் கணக்கீடு தொடர்பான விரிவுரை அடுத்து நடைபெற்றது. இன்றைய இரு வளவாளர்களும் கணக்கீடு, பொருளியல் பாடங்களுக்கான பரீட்சைகளின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விடை எழுதும் முறைமை தொடர்பாகவும் வினாக்களை அணுகும் விதம் குறித்தும் நீண்ட விளக்கம் கொடுத்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வுகளையும் வழங்கினர். குறித்த பாடங்கள் தொடர்பான கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேநீர், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. கருத்தரங்குகளின் நிறைவில் மாணவர்களிடமிருந்து செயலமர்வு தொடர்பான விமர்சனங்கள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டன. மிகவும் திருப்தியாக இரு நாள் அமர்வுகளும் இருந்ததாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்ததுடன் தமக்காக இரு நாட்களை செலவு செய்த விரிவுரையாளர்களுக்கும் திரு.க.வினோதன் அவர்களுக்கும் மற்றும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்துக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.