Saturday, 29 November 2014

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் 2014 புலமை பரிசில் பரீட்சை

        சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் 2014 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 13 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 28 நவம்பர் , வெள்ளி அன்று நடை பெற்றது.வித்தியாசாலை அதிபர் திருமதி.மலர்விழி குணபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்
திரு.செ.சந்திரராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக கோட்ட கல்விப்பணிப்பாளர் செல்வி.அந்தோனி.சாந்தா மரியாம்பிள்ளை அவர்களும் பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி.சி.புனிதவதி அவர்களும் சிறப்பு அதிதியாக சுழிபுரம் கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஒய்வு நிலை அதிபருமாகிய பிரம்மஸ்ரீ.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இதன் போது கல்வி அபிவிருத்திக்
குழுவினர் ஊடாக ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விக்டோரியன் திரு,சி.ரவிசங்கர் அவர்களால் வித்தியாசாலை தரம் 5 கல்வி மேம்பாடு கருதி ரூபா  56000 /=  வழங்கப்பட்டது.                                                                                                                                                                           காணோளிக்கு கீழ் உள்ள இணைப்பை  சொடுக்குக .....                                                                          
     ஒய்வு நிலை அதிபர் உரை