Sunday, 2 November 2014

பாரதி முன் பள்ளிக்கு திரு.உலகநாதன் அவர்கள் வருகை (Ref:News from www.Bharthy.info)

ஐக்கியஇராச்சியச்சிய பழைய மாணவர் ஒன்றிய காப்பாளர் திரு.த.உலகநாதன் அவர்கள் பாரதி முன் பள்ளிக்கு வருகை தந்து பள்ளியின் நிலவரத்தை அறிந்துகொண்டார்.
                   பாரதி முன்பள்ளி நிரந்தர கட்டடம் அற்று கிராம அபிவிருத்திசங்க - கணேச சனசமூக நிலைய  ,மாதர் சங்க கட்டட தொகுதியில் இயங்கி வந்த வேளையில் திரு.த.உலகநாதன் அவர்கள் 2012  இல் விக்டோரியா கல்லூரி ரிட்ஜ்வே மண்டப புனரமைப்பின் பின்னரான கையளிப்பு நிகழ்விற்காக   தாயகம் வந்திருந்த வேளையில் ஐக்கிய இராச்சியச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிறைவேற்று குழு உறுப்பினரும் எமது மன்ற நலன் விரும்பியும் கொடயாளருமகிய திரு.சி.ரவிசங்கர்  அவர்களும் தாயகம் வந்திருந்தார்.
 
        அவ்வேளையில் பாரதி முன்பள்ளி கட்டட நிர்மாணிப்பு குழுவினருடனான கலந்துரையாடலை தொடர்ந்து  திரு.சி.ரவிசங்கர்    அவர்களால்        .பாரதி முன் பள்ளிக்கு நவீன வசதிகள் கொண்டதும் முழுநிறைவானதுமான   நிரந்தர கட்டடம்  அமைக்கபெற்று எத்ர்வரும் நவம்பர் 16 ம்  திகதி அன்று ஓர் ஆண்டு பூர்த்தி அடைகின்றமை குறிப்பிடத் தக்கதாகும் .
 
இவ் வேலை திட்டம் நிறை வேற திரு.த.உலகநாதன் அவர்கள் ஐக்கியஇராச்சியச்சிய பழைய மாணவர்  ஒன்றியம் சார்பாக பூரண ஒத்தாசை வழங்கியமை எம்மால் மறக்கமுடியாத உண்மையாகும்