Aug 6 , 2017 அன்று நடைபெற்ற பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழாவில் நடைபெற்ற விவாத அரங்கிற்கு நடுவராக கலந்துகொண்ட
பிரபல சட்டத்தரணி வட்டூர் திரு.கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் விவாத அரங்கில் கலந்து கொண்ட பொருளாதரத்தில் நலிவுற்ற சுழிபுரம் மேற்கை சேர்ந்த விக்ரோறியாக் கல்லூரி 2016 கலைத் துறை மாணவனும் சப்ரகமுவ பல்கலைகழக சமூக விஞ்ஞான கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பெற்றுள்ள செல்வன்.து.சுதர்சன் எனும் மாணவனுக்கு, தமிழ் ஆசிரியை திருமதி. யோ .பங்கயச்செல்வி அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் மேற்படி மாணவனின் பல்கலைக்கழக கல்விக்கான முழுப் பொருளாதார உதவியினை வழங்க முன்வந்தார்.
அவரது முன்மாதிரிக்கு பாரதி சமூகத்தினரும் ,விக்ரோறியாக் கல்லூரி சமூகத்தினரும் பாராட்டுத் தெரிவிப்பதுடன் அவரிற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.