Monday, 31 December 2012

Dinner at our principal's house for Senthil

அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எங்கள் கல்லுர்ரியின் பழைய மாணவன் திரு.க.செந்தில்நாதன் அவர்கள் எமது அதிபரின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரும் கல்லூரியின் உபஅதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களும் இராப்போசனம் அருந்தி மகிழ்தனர்.

வடமாகாண கல்விப் பிரிவின் ஆளணி விரைவில் சீராக்கம்

முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய வடமாகாண கல்விப்பிரிவின் நிர்வாகச் செயற்பாடுகளில் ஆளணியினர் சீராக்கம் செய்யப்படவுள்ளனர் என்று வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்; கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Increase O/L paper evaluation fees - SLTSA

The Sri Lanka Teacher Services Association (SLTSA) has demanded the Education Ministry to increase the Ordinary Level exam paper evaluation fees.

40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்

இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.

Sunday, 30 December 2012

றோகினியும் றாகினியும் வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார்

எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார். அண்மையில் திருமதி.றோகினி குடும்பத்தினரும் திருமதி.றாகினி சிவகுமாரும் கல்லூரிக்கு வருகை தந்து உதவி பெறும் மாணவியுடன் கலந்துரையாடி கற்றலுக்காக அவரை ஊக்குவி்த்தனர். கல்விக்காக தொடர்ந்தும் அம்மாணவிக்கு தமது உதவி கிடைக்கும் என உறுதியளித்தனர். றோகினியும் றாகினியும் பண்ணாகம், வைத்திய கலாநிதி அமரர்.கைலாசப்பிள்ளை அவர்களின் புதல்விகளாவர்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

அண்மையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Saturday, 29 December 2012

2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை

2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.