2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி முதலாம் தவணை ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 05ஆம் வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரை நடை முறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.