Saturday, 29 December 2012

அதிபர் தரம் 2-1 இல் உள்ளவர்களுக்கு அதிபர் தரம் 1 வழங்க ஏற்பாடு

அதிபர்சேவைத்தரம் 2-1 இல் நீண்டகாலம் கடமையாற்றி அதிபர் சேவைத்தரம் 1 வழங்கப்படாமல் உள்ள அதிபர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் சேவைத்தரம் 2-1 இல் இருப்போக்கு நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல் இருப்பதனை கல்வி அமைச்சிடம் தாம் சுட்டிக்காட்டியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இப்பதவியுயர்வுக்குப் தகுதியானவர்கள் எதிர்வரும் 2013 ஜனவரி 14ஆம்; திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் தன்னுடனோ அல்லது சங்கத்தின் தலைவருடனோ தொடர்புகொள்ளும் படியும் தெரிவித்தார்.