Tuesday, 1 May 2012

Great Achievement in sports again

வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் 10 முதலிடங்களையும் 15 இரண்டாமிடங்களையும் 11 மூன்றாமிடங்களையும் வெற்றி கொண்டுள்ளனர். இவ்வெற்றிகளில் 4 வெற்றிகள் அஞ்சலோட்டக் குழுக்கள் பெற்றுக் கொண்டதாகும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாவட்ட மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் மேற்கூறிய வெற்றிகளைப் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அதற்கான பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.