நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் கடந்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்தும் ஒரு தேசிய பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற மூவாயிரத்து 100 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் 10 வருடங்களிற்கு அதிக காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற ஒன்பதாயிரத்து 300 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இருப்பினும் நாடளாவிய ரீதியில் 343 தேசிய பாடசாலைகள் உள்ளன. இந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களிற்காக இதுவரையில் இடமாற்றம் செய்யப்படாமல இருந்தனர் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணமட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.