Tuesday, 25 December 2012

Dr Ramachandiran's Visit

எமது கல்லூரியில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரான Dr.S.இராமச்சந்திரன் அவர்கள் நேற்றைய தினம் நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரும் அவரது பாரியாரும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டு தமது கல்விச் சாலையின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். "தம்பா" என எல்லோராலும்  அழைக்கப்படும் இவர்,  ஒரு புற்று நோயியல் நிபுணராவார். 2013ம் ஆண்டுக்கான துடுப்பாட்டப்போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் Dr.இராமச்சந்திரன் கலந்து சிறப்பித்தார். இவர் கல்லூரியின் புகழ் மிக்க துடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் நேற்றைய பயிற்சிகளின் போது வீராங்கனைகளை வாழ்த்தி ஆசிகூறியதுடன் அவர்களோடு இணைந்து துடுப்பாட்டத்திலும் களத் தடுப்பிலும் ஈடுபட்டார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒரு தொகைப் பந்துகளையும் அன்பளிப்பாக வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரரான இவர், துடுப்பெடுத்து ஆடியும் பந்துவீசியும் தனது பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டார்.  கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாக அதிபருடன் மிகவும் அக்கறையாகக் கலந்துரையாடினார்.

See Photos