இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பழைய மாணவர்களான
திரு.அ.சதானந்தமனுநீதி அவர்களும் திரு.க.செந்தில்நாதன் அவர்களும் வருகை
தந்தார்கள். நேற்றைய தினம் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த
Dr.இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்ந்து இன்று இவர்கள் இருவரும் கல்லூரியைச்
சுற்றிப் பார்வையிட்டு
மகிழ்ச்சியடைந்தனர். இவர்களுடன் முன்னாள் பிரதிஅதிபர்
திரு.சி.க.இந்திரராஜா(EDC வெளிநாட்டு இணைப்பாளர்) அவர்களும் Dr.கண்ணதாசன் (EDC செயலாளர்) அவர்களும் கலந்து கொண்டு
கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன்
எதிர்வரும் 27-12-2012ம் திகதி வலிகாமம் கல்வி வலயம் நடாத்தும் பௌர்ணமி
விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகளின்
ஒத்திகைகளையும்
பார்வையிட்டனர்.
See Photos