Monday, 14 January 2013

புலமைப்பரிசில் பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களின்  எண்ணிக்கை அதிகரிக்கப்பட நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமையவே புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை ஏழாயிரமாக அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரை காலமும் ஐயாயிரம் பேருக்கே இந்த புலமைபரிசில் வழங்கப்பட்டு வந்தன . எனினும் ஜனாதிபதியின்  பணிப்புரையடுத்து  இனிமேல் இந்த தொகை மேலும் இரண்டாயிரத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதுவரை காலமும் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் போது 15 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் தொகை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.