Wednesday, 30 January 2013

EDC Donating Computers

30.01.2013 அன்று பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் EDC அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் இரண்டு புதிய கணினிகள் அன்பளிப்பாகக் கையளிக்கப்பட்டுள்ளது .

இக்கணினிகள் பிரித்தானியாவில் வசித்து வரும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .S. ரவிசங்கர் அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது .
இக்கணினிகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட விழாவினை மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்கள் தலைமை ஏற்று நடாத்தினார் .பிரதம விருந்தினராக விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தன் அவர்களும் ,EDC அமைப்பாளர் திரு .DR.கண்ணதாசன் ,முன்னாள் அதிபர் திரு .சிவகணேசசுந்தரம் ,திரு .ஹரிதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இவ்விழாவில் கலந்து சிறப்புரை ஆற்றிய விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் அவர்கள் இக்கணினியின் உபயோகத்தினால் மாணவர்களுக்கு எவ்வாறு நன்மை அளிக்கும் என்பதனையும் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் கணினி பற்றிய அறிவினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதனையும் தெளிவுபடுத்தினார் .
இன்று ICT ஒரு முக்கிய பாடமாக உள்ளது இதனைக் கருத்தில் கொண்டு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக EDC அமைப்பாளர்கள் எமது கிராமப்பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் தமது சேவையைச் செய்வது மகிழ்ச்சி தரும் விடயமாகும் .
பண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் உதவி அதிபர் திருமதி .கலைராணி அவர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் உழைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

அவர்களைப்போல் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவி உதவி அதிபரின் சகோதரி திருமதி .த .பகவதி அவர்கள் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாசாலையை நல்லதோர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் .
அவர்களுடன் சேர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உப தலைவரும் ,யுகே பழைய மாணவர் சங்கத்தை உருவாக்குவதக்காக அயராது உழைத்தவரும் பண்ணாகம் அபிவிருத்தி சங்கத்தின் யுகே கிளையின் தலைவருமான திரு .சி .ஸ்ரீனிவாசன் அவர்களும் மெய்கண்டான் பாடசாலை அபிவிருத்திக்காக உழைத்து வருகின்றார்கள் .

கணினிகளை நன்கொடையாகக் கொடுத்த யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .சி .ரவிசங்கர் அவர்களுக்கு மெய்கண்டான் மகாவித்தியாலய நிறுவாக, EDC அமைப்பாளர்களும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .