Monday, 14 January 2013

Visit of Our Old Student Sathiyakeerthy

விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் அவுஸ்திரேலியாவிலிருந்து திரு.சத்தியகீர்த்தி தனது குடும்பத்தினருடன் இன்று கல்லூரிக்கு வருகை தந்தார். அவர்கள் கல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு கல்லூரியின் செயற்பாடுகள் அபிவிருத்திகள் குறித்தும் மிகவும் அக்கறையுடன் கலந்துரையாடினார்கள். அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், Dr.கண்ணதாசன்(EDC, செயலாளர்)
ஆகியோருடன் தனது பள்ளிக்கால நினைவுகளை மீட்டதுடன் கல்லூரியின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்புகளை அவுஸ்திரேலியா பழைய மாணவர்சங்கத்தினூடாக வழங்குவதற்கும் முன்வந்துள்ளார். அவருடன் கல்லூரியின் பழைய மாணவன் திரு.ரவீந்திரன் அவர்களும் (விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மகரகம) வருகைதந்திருந்தார். கல்லூரியின் அழகான சூழலையும் புனரமைக்கப்பட்ட ரிச்வே மண்டப கவர்ச்சியையும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களையும் வெகுவாக ரசித்தார்கள். தைத்திருநாளில் முதல்தினத்தில் அவர்களின் வருகை அந்நேரத்தில் வந்திருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. 
See Photos