நூலக மாதத்தினை
முன்னிட்டு எமது கல்லூரியில் புத்தகக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகின்றது.
பாடப்புத்தகங்கள், பயிற்சிப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள், ஆங்கிலம், கணனி சார்ந்த
புத்தகங்கள் எனப் பலவகைப்பட்ட நூல்களும் கற்றல் உபகரணங்களும் இக் கண்காட்சியில்
இடம்பெற்றுள்ளன. இன்று காலை கண்காட்சி அதிபர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக
ஆரம்பித்துவைக்கப்பட்டது. சென்ற மாத இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது
பரிசு பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கொள்வனவுப் பெறுமதிப் பத்திரங்களை மாணவர்கள்
சமர்ப்பித்துத் தமக்குத் தேவையான பல்வேறு புத்தகங்களையும் கொள்வனவு செய்தமையைக்
காணக்கூடியதாயிருந்தது. மாணவர்களின் தேடலையும் வாசிப்பு ஆற்றலையும் வளர்ப்பதற்கு
இக் கண்காட்சி பெரிதும் உதவுமென கல்லூரி அதிபர் கருத்துத்
தெரிவித்தார்.