யுகே பழைய மாணவர் ஒன்றிய காரியதரசி தாமோதரம்பிள்ளை – கமலநாதன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி யை சுழிபுரம்
பழைய மாணவர் சங்க காரியதரசி இரா ஸ்ரீரங்கன் சபையில்வாசித்தார்.
பழைய மாணவர் சங்க காரியதரசி இரா ஸ்ரீரங்கன் சபையில்வாசித்தார்.
ஆண்டு தோறும் எமது விக்ரோறியாக் கல்லூரியில் நடைபெற்று வரும்
ஆசிரியர் தினம் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும்
முகமாக நடைபெற்று வருகின்றது. இத்தினத்தில் ஆசிரியர்கள் யாவரும் தங்களிடம் கல்வி கற்கும்
அனைத்து மாணவர்களையும் நல்லொழுக்கத்துடனும், சிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்படுவதற்கு
உறுதிமொழி எடுத்தல் வேண்டும். மாணவர்களின் கல்விவளர்ச்சியும், அவர்களின் வாழ்வின் உயர்ச்சியும் ஆசிரியர்களான உங்கள்
கையில் தான் உள்ளது.
இதற்காக ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு
அயராது பாடுபடுவீர்கள் என நம்புகின்றோம். எமது கல்லூரி ஆசிரியர்களின் தன்னலமற்ற மனப்பூர்வமான
சிறந்தசேவையை யுகே பழைய மாணவர் ஒன்றியம் மிகவும் பாராட்டி நிற்கின்றது. கல்லூரியின்
கல்வி வளர்ச்சிக்கும் விளையாட்டுத் துறைக்கும்
எமது ஒன்றியம் எதிர்காலத்தில் வேண்டிய முழு ஆதரவையும் தரும் என உறுதி கூறுகின்றோம்.
இத்தினத்தில் அதிபர் திரு. வ. ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் மற்றும்
அனைத்து ஆசிரியர்களுகுக்கும், யுகே பழைய மாணவர் ஒன்றியம்
தமது நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றது.
நன்றி
தாமோதரம்பிள்ளை – கமலநாதன்,
காரியதரசி,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.