எமது கல்லூரியின் சாரணவீரர் நிரோஜன் இலங்கையின் இரண்டாவது சாரணர் உயர்
விருதாகிய பிரதம ஆணையாளர் விருதினைப் பெற்றுள்ளார். க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி
பயிலும் இவர் பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குகொள்பவராவார்.
மாணவமுதல்வராகவும் பணியாற்றுகின்றார். அண்மையில் நடைபெற்ற வருடாந்த சாரணர் மாவட்ட
ஒன்றுகூடலின் போது நிரோஜன் பிரதம ஆணையாளர் விருதினை மாவட்ட சாரண ஆணையாளரிடம்
பெற்றுக்கொண்டார். அடுத்த விருதாகிய ஜனாதிபதி விருதினைப் பெறும் முயற்சியில்
ஈடுபட்டுள்ள இவரைக் கல்லூரியின் சாரணப் பொறுப்பாசிரியரும் மாவட்ட உதவி ஆணையாளருமான
திரு.செ.சிவகுமாரன் (கல்லூரி உபஅதிபர்) அவர்கள் வழிப்படுத்துகின்றார்.