இன்று எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக உலகவங்கியின்
இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாகாண, வலயம் என்பவற்றைச் சார்ந்த கல்வி
அதிகாரிகளும் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள், இணைப்பாடவிதான வெற்றிகள் மற்றும் ஆசிரியர்களின்
கற்பித்தல் விருத்திக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும்
கலந்துரையாடியும் ஆவணங்களைப் பார்வையிட்டும் திருப்தி தெரிவித்தார்கள். ஆயிரம்
பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது கல்லூரி செயற்பாடுகளுக்கு
ஊக்கமளிப்பதும் ஆலோசனைகள் வழங்குவதும் இவர்களின் வருகையின் நோக்கமாயிருந்தது. எமது
ஊட்டல் பாடசாலையான ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கும் சென்ற இக்குழுவினர் அங்கும்
பாடசாலை வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடி திருப்தியை
வெளிப்படுத்தினார்கள்.