எமது கல்லூரியில் இவ்வாண்டுக்கான முத்தமிழ் விழா இன்றைய தினம் றிஜ்வே
மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. முத்தமிழ் மன்றத் தலைவி செல்வி.அனோஜிதா சிவாஸ்கரன்
தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்
”விக்ரோறியன்” செல்வி.இ.இராதா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இசை,
நடனம், ஆதிவாசிகள் நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், பாராளுமன்ற அமர்வு போன்ற பல
சுவையான நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. தமிழ்த்துறை, அழகியல்துறை சார்ந்த
ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் மாணவர்களின் பல்வேறு திறன்களையும் வெளிப்படுத்தும்
நிகழ்வுகளாக இவை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் நடைபெற்ற
தமிழ்த்தினப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன.