Tuesday, 8 October 2013

தேசிய வெற்றி

தேசியமட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டார்கள்.அகில இலங்கைத் தமிழ்த்தினம் கட்டுரை ஆக்கப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற செல்வி.காய்த்திரி தேவசுதன் மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மைப் போட்டிகளில் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் (19 வயது - பெண்)இரண்டாம் இடத்தைப் பெற்ற செல்வி.ரஜிதா பாலச்சந்திரன் ஆகிய இருவரும் மாலைசூட்டி,பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர். செல்வி.காயத்திரியின் வெற்றியைப் பாராட்டி
தமிழ்த்துறை ஆசிரியை திருமதி.பங்கயச்செல்வி யோகநாதன் அவர்களும் செல்வி.ரஜிதாவின் வெற்றியை புகழ்ந்து விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திருமதி.ஜெயகௌரி ஆதித்தன் அவர்களும் உரையாற்றினார்கள். செல்வி.ரஜிதா அவர்களுக்கு அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கம்(மெல்போன்)திரு.க.செந்தில்நாதன் மூலம் அனுப்பப்பட்ட 10000 ரூபா அன்பளிப்புத் தொகையும் இவவைபவத்தின் போது வழங்கப்பட்டது. செல்வி.ரஜிதா அவர்களை இப்போட்டிக்காக கல்லுரியின் பழைய மாணவன் ”விக்ரோறியன்“ திரு.ந.சிவரூபன் அவர்கள் பயிற்றுவித்திருந்தார்.

See More Photos