எமது கல்லூரியிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சென்ற டிசம்பர் மாதம்
தோற்றி கணித பாடத்தில் அதிவிசேட சித்தி (A) பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
இன்று கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர்
திரு.செ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விக்ரோறியன்
திரு.சபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களைக் கௌரவித்தார். கல்லூரிப் பழைய மாணவரும்
கல்லூரியின் முன்னாள் நூலகரும் பிரபலமான கணித ஆசானுமாகிய திரு.ச.பாலகிருஷ்ணன் (பாலா
மாஸ்டர்) தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். 'A' தரச் சித்தியை கணித
பாடத்தில் பெற்ற 19 மாணவர்களுக்கு தலா 2000/-வை அன்பளிப்பாக பாலா மாஸ்டர்
வழங்கியதுடன் இவர்களுக்குக் கற்பித்த கணித ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கி
கௌரவித்தார். அத்துடன் 9A சித்தி பெற்ற மாணவியான செல்வி கார்த்திகாயினி ரவீந்திரன்
அவர்களுக்கு ஒவ்வொரு 'A' சித்திக்கும் 1000/- வீதம் 9000/- “விக்ரோறியன்“ Dr.ரமணன்
அவர்களின் அனுசரணையுடன் பாலா மாஸ்டர் கொடுத்து மதிப்பளித்தார். இந் நிகழ்வில் ஓய்வு
நிலை அதிபர்களான திரு.வ.ஸ்ரீகாந்தன், திரு.சி.சிவகணேசசுந்தரன் ஆகியோரும் கலந்து
சிறப்பித்தார்கள். இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சுழிபுரம் கல்வி அபிவிருத்திக்
குழுவால் (EDC) மேற்கொள்ளப்பட்டிருந்தது.