Friday, 31 October 2014
ஜனாதிபதி விருதுபெறும் கலாநிதி கண்ணதாசன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
எமது சுழிபுரம் விரோறியாக் கல்லூரியில் கடந்த 138 ஆண்டுகளில் பல கல்விமான்களையும், அரசியல்
மேதைகளையும்,பொருளியலாளர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கிய எமது கல்லூரி பெருமை பெறத்தக்க வகையில் இன்று கல்லூரியின் பழைய மாணவனும், யாழ் / பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளருமாகிய DR . செல்வம் கண்ணதாசன் அவர்கள் மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு பின்பு அதன் முடிவுகளை சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளிக்கொண்டுவந்தார். இவரது ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ந்த இலங்கை விஞ்ஞானிகள் சங்கம் அவரின் ஆய்வுக்கட்டுரையின் திறமையைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி விருதை வழங்க முன்வந்துள்ளது. இவ்விருது 31.10.2014 அன்று கொழும்பில் பத்தரமுல்லையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். இச்சிறந்த விருதைப்பெற இருக்கும் DR .செல்வம் கண்ணதாசன் அவர்களையிட்டு எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பெருமிதத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி மேதைகளையும்,பொருளியலாளர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கிய எமது கல்லூரி பெருமை பெறத்தக்க வகையில் இன்று கல்லூரியின் பழைய மாணவனும், யாழ் / பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளருமாகிய DR . செல்வம் கண்ணதாசன் அவர்கள் மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு பின்பு அதன் முடிவுகளை சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளிக்கொண்டுவந்தார். இவரது ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ந்த இலங்கை விஞ்ஞானிகள் சங்கம் அவரின் ஆய்வுக்கட்டுரையின் திறமையைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி விருதை வழங்க முன்வந்துள்ளது. இவ்விருது 31.10.2014 அன்று கொழும்பில் பத்தரமுல்லையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். இச்சிறந்த விருதைப்பெற இருக்கும் DR .செல்வம் கண்ணதாசன் அவர்களையிட்டு எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பெருமிதத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
Thursday, 30 October 2014
News From Bharathy Website - எமது மன்ற நலன் விரும்பி கலாநிதி கண்ணதாசன் அவர்களிற்கு ஜனாதிபதி விருது (Ref www.bharathy.info)
எமது மன்ற நலன்விரும்பியும் விக்ரோறியா கல்லூரி அபிவிருத்திக் குழு - அபிவிருத்திச்சங்க செயலாளரும் கவிஞரும் எழுத்தாளரும் யாழ் பல்கலைகழக மருத்துவபீட விரிவுரையாளருமகியருமகிய நெல்லியான் தந்த மைந்தன் கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் ,
மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக சர்வதேச மருத்தவ சஞ்சிகையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக அகில இலங்கை விஞ்ஞானிகள் சங்கத்தினால் மூன்று வருடங்களிற்கு ஓர் முறை 31 நவம்பர் 2014 அன்று (விக்டோரியா கல்லூரி நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ள அதே தினத்தில் ) கொழும்பு பத்தரமுல்லையில் நடத்தப்படும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதியால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக சர்வதேச மருத்தவ சஞ்சிகையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக அகில இலங்கை விஞ்ஞானிகள் சங்கத்தினால் மூன்று வருடங்களிற்கு ஓர் முறை 31 நவம்பர் 2014 அன்று (விக்டோரியா கல்லூரி நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ள அதே தினத்தில் ) கொழும்பு பத்தரமுல்லையில் நடத்தப்படும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதியால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
. அவரது ஆய்வு பணிகள் மேலும் தொடர்ந்து மருத்துவ துறையில் மேலும் பல சாதனைகள் படைக்கவும் அவரது காத்திரமான பணிகளால் கல்வி சமூகம் மேலும் சிறப்படையவும் கவியுலகு பெருமைபெறவும் பாரதி சமூகம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது .
Wednesday, 29 October 2014
Sunday, 26 October 2014
தோல் துடுப்பாட்ட துறைக்கு திரு. தா .கமலநாதன் அவர்களின் உதவி
விக்டோரியா கல்லூரி தோல்பந்து துடுப்பாட்ட துறை மேம்பாட்டிற்கென ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றிய செயலாளர் திரு. தா .கமலநாதன் அவர்கள் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து 50000 ரூபாவினை உடற்கல்வி ஆசிரியர் திரு.சிவசெல்வன் அவர்களிடம் வழகியுள்ளார் .
இந்நிதியில் பெரும்பகுதி மூலம் 13 வயதிற்கு உட்பட்ட அணிக்கான துடுப்பாட்ட உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. . .இந்த ஆண்டிலேயே பதின்மூன்று வயதின் கீழான அணி முதல் தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வணியினர் தாம் கலந்துகொண்ட யாழ்பாணக்கல்லூரியுடானான கன்னி ஆட்டத்தில் சம புள்ளிகளை பெற்றுக்கொண்டனர. இவ்வணியினர்கான பயிற்சிகளை பயிற்ச்சியாளர் திரு. ந சிவரூபன் அவர்கள் வழங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
Saturday, 25 October 2014
நாவலர் சிலை நிர்மாணிப்பு
கல்லூரி வளாகத்தில் கனகரத்தினம் வகுப்பறை மண்டப தொகுதிக்கு முற்புறத்தில் நாவலர் நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்ட நாவலர்பெருமானின் அமார்ந்திருகும் சுமார் 4 அடி உயரமான சிலை நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .சிலைக்கான பீடம் அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகள் மேலும் சில தினகளில் நிறைவுபெறும் எதிர்பார்கபடுகின்றது. விரைவில் நடைபெறவுள்ள கல்லூரி முத்தமிழ் விழாவின்போது சிலை திறந்துவைக்கப்படவுள்ளது .
Thursday, 16 October 2014
தங்கப்பதக்கம் பெற்ற சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்
அகில இலங்கை ரீதியில் 2014 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதலில் எமது விக்ரோறியாக்கல்லூரி மாணவி செல்வி ரஜிதா –பாலச்சந்திரன் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவிக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் மிகுந்த பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
எமது கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாணவி ரஜிதா அவர்கள் பெற்றுத்தந்த இந்தப் புகழ் வரலாற்று ஏட்டில் பதியப்பட வேண்டிய நிகழ்வாகவும், இம் மாணவி கல்லூரியின் சகல விளையாட்டு துறைகளிலும் பங்கு கொண்டு வீராங்கனையாக திகழ்ந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதையிட்டு எமது ஒன்றியம் பெருமை கொள்கின்றது
மாணவி ரஜிதா –பாலச்சந்திரன் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரிச் சமூகம், அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறிப்பாக எமது கல்லூரி மாணவர்களின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் விக்ரோறியன் திரு .சிவரூபன் அவர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மேலும் பல மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு சென்று பல விருதுகளைப் பெற வேண்டும். அதற்கு எமது ஒன்றியம் என்றும் உறுதுணையாக இருக்கும்.
நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
See Photos
Subscribe to:
Posts (Atom)