Friday, 31 October 2014

ஜனாதிபதி விருதுபெறும் கலாநிதி கண்ணதாசன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

எமது சுழிபுரம் விரோறியாக் கல்லூரியில் கடந்த 138 ஆண்டுகளில் பல கல்விமான்களையும், அரசியல்
மேதைகளையும்,பொருளியலாளர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கிய எமது கல்லூரி பெருமை பெறத்தக்க வகையில் இன்று கல்லூரியின் பழைய மாணவனும், யாழ் / பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளருமாகிய DR . செல்வம் கண்ணதாசன் அவர்கள் மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு பின்பு அதன் முடிவுகளை சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளிக்கொண்டுவந்தார். இவரது ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ந்த இலங்கை விஞ்ஞானிகள் சங்கம் அவரின் ஆய்வுக்கட்டுரையின் திறமையைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி விருதை வழங்க முன்வந்துள்ளது. இவ்விருது 31.10.2014 அன்று கொழும்பில் பத்தரமுல்லையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். இச்சிறந்த விருதைப்பெற இருக்கும் DR .செல்வம் கண்ணதாசன் அவர்களையிட்டு எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பெருமிதத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. 
                           நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்