Thursday, 30 October 2014

News From Bharathy Website - எமது மன்ற நலன் விரும்பி கலாநிதி கண்ணதாசன் அவர்களிற்கு ஜனாதிபதி விருது (Ref www.bharathy.info)

எமது மன்ற நலன்விரும்பியும் விக்ரோறியா கல்லூரி அபிவிருத்திக்  குழு - அபிவிருத்திச்சங்க செயலாளரும் கவிஞரும் எழுத்தாளரும் யாழ் பல்கலைகழக மருத்துவபீட விரிவுரையாளருமகியருமகிய நெல்லியான் தந்த மைந்தன் கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் ,
        மனிதர்களில் காணப்படும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக சர்வதேச மருத்தவ சஞ்சிகையில் எழுதிய  ஆய்வுக் கட்டுரைக்காக அகில இலங்கை விஞ்ஞானிகள் சங்கத்தினால் மூன்று வருடங்களிற்கு ஓர் முறை   31 நவம்பர் 2014 அன்று  (விக்டோரியா கல்லூரி நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ள அதே தினத்தில் ) கொழும்பு பத்தரமுல்லையில்  நடத்தப்படும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதியால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

.      அவரது ஆய்வு பணிகள் மேலும் தொடர்ந்து மருத்துவ துறையில் மேலும் பல சாதனைகள் படைக்கவும் அவரது காத்திரமான  பணிகளால் கல்வி சமூகம் மேலும் சிறப்படையவும் கவியுலகு பெருமைபெறவும்  பாரதி சமூகம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது .