Sunday, 26 November 2017

ஆறு..திருமுருகன் அவர்களின் சிறப்புரை.- பாரதி கலை மன்றம்

க.பொ.த.(சா.த) 2017 மாணவர்களிற்கான விஞ்ஞான கருத்தரங்கு

உப-அதிபர் திரு.அ.சேந்தன் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் யாழ்  விஞ்ஞான பீட மாணவர்களினால் விஞ்ஞான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.






செய்முறை விளக்கங்களுடனான கருத்தரங்கு சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்திலும் செய்முறைப் பயிற்ச்சிகள் விஞ்ஞான ஆய்வு கூடங்களிலும் நடைபெற்றன.

Friday, 24 November 2017

திருமதி இராஜேஸ்வரி கேசவன்

Lankasri Notice!

திருமதி இராஜேஸ்வரி கேசவன்
பிறப்பு : 1 மே 1954 — இறப்பு : 23 நவம்பர் 2017
யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கேசவன் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம்(சுழிபுரம் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,

டோசியா, குலசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராஜசேகரம், சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டக்சன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவமனோகரி, லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், புஷ்பா, காலஞ்சென்ற விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், சரவணபவானந்தன், மலர்மாது, மீனலோஜினி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, கங்காதரன், பரமேஸ்வரி, ஜெகாசக்தி, லிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/11/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 07:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada. 
தொடர்புகளுக்கு
குலசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472367426
டக்சன்னா(மருமகன்) — கனடா
தொலைபேசி:+15144498184
சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771729874
விஜயன் — இந்தியா
செல்லிடப்பேசி:+919094917542
ராசா — கனடா
செல்லிடப்பேசி:+14169942878
ஞானம் — கனடா
செல்லிடப்பேசி:+14168929038
டோசியா(மகள்) — கனடா
தொலைபேசி:+15146928184

Wednesday, 15 November 2017

உயர் கல்விக்கான உதவி -திரு.க.சுகாஷ்

Aug 6 , 2017 அன்று நடைபெற்ற பாரதி கலை மன்றத்தின் 35 வது  ஆண்டு நிறைவு விழாவில் நடைபெற்ற விவாத அரங்கிற்கு நடுவராக கலந்துகொண்ட

பிரபல சட்டத்தரணி வட்டூர் திரு.கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் விவாத  அரங்கில்   கலந்து கொண்ட  பொருளாதரத்தில் நலிவுற்ற சுழிபுரம் மேற்கை சேர்ந்த விக்ரோறியாக் கல்லூரி 2016 கலைத் துறை மாணவனும் சப்ரகமுவ பல்கலைகழக சமூக விஞ்ஞான கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பெற்றுள்ள செல்வன்.து.சுதர்சன் எனும் மாணவனுக்கு,  தமிழ் ஆசிரியை திருமதி. யோ .பங்கயச்செல்வி    அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் மேற்படி மாணவனின் பல்கலைக்கழக  கல்விக்கான முழுப் பொருளாதார உதவியினை வழங்க முன்வந்தார்.
   அவரது முன்மாதிரிக்கு பாரதி சமூகத்தினரும் ,விக்ரோறியாக் கல்லூரி சமூகத்தினரும் பாராட்டுத் தெரிவிப்பதுடன் அவரிற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.