எமது கல்லூரியின்
வருடாந்த ஆசிரியர் தினம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. ஆசிரியர் தினம்
அக்ரோபர் 6ம் திகதி உலகளாவிய நிலையில் கொண்டாடப்பட்ட போது நவராதடதிரி வழிபாட்டுக்
காலம் காரணமாக எமது கல்லூரியில் 15ம் திகதி வரை பிற்போடப்பட்டது. பழைய
மாணவர் சங்கத் தலைவர் திரு.வி.உமாபதி அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்
ஓய்வுநிலை ஆசிரியர் திரு.க.கனகசபை அவர்கள் பிரதமவிருந்தனராக கலந்து
கொள்ளவுள்ளார்.ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுவதுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும்
நடைபெறவுள்ளன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர் சங்கம்
மேற்கொள்கின்றது.